குமரி மாவட்டம் மணவாளக்குறிச்சி, காந்தாரிவிளை பகுதியை சேர்ந்தவர் பீர் முகம்மது அவர்கள் நேற்று (21-01-2021) இரவு மரணமடைந்தார். பீர் முகம்மது அ...
குமரி மாவட்டம் மணவாளக்குறிச்சி, காந்தாரிவிளை பகுதியை சேர்ந்தவர் பீர் முகம்மது அவர்கள் நேற்று (21-01-2021) இரவு மரணமடைந்தார்.

பீர் முகம்மது அவர்கள் மணவாளக்குறிச்சி முஸ்லிம் ஜமாஅத்-ல் முன்னாள் துணைத் தலைவராக இருந்து, மக்கள் பணியாற்றியுள்ளார்.
புகழ்பெற்ற மணவாளக்குறிச்சி மணல் ஆலையில் தலைமை காவலராக பணியாற்றி ஓய்வு பெற்றவராவார். இதனால் மணவாளக்குறிச்சி பகுதி மக்கள் இவரை, “வாச்சர்” என்றே அழைத்து வந்தனர்.

அன்னாரது உடல் மணவாளக்குறிச்சி, காந்தாரிவிளையில் உள்ள அவரது வீட்டில் வைக்கபப்ட்டுள்ளது. உடல் நல்லடக்கம் இன்று (22-01-2021) மாலையில் நடக்கிறது.
மணவாளக்குறிச்சி முஸ்லிம் மையவாடியில் வைத்து மாலை வேளையில் நல்லடக்கம் நடைபெற இருக்குறது.
இவருக்கு செய்யது அலி மற்றும் சாகுல் ஹமீது என்ற இரு மகன்கள் உள்ளனர்.
No comments