காட்சி கோபுரம் கன்னியாகுமரி கடற்கரையில் உள்ள காட்சி கோபுரத்தை தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் தனது கட்டுபாட்டில் வைத்துள்ளது. கன்ன...
காட்சி கோபுரம்
கன்னியாகுமரி கடற்கரையில் உள்ள காட்சி கோபுரத்தை தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் தனது கட்டுபாட்டில் வைத்துள்ளது. கன்னியாகுமரிக்கு வரும் சுற்றுலா பயணிகள் சூரிய உதயம் மற்றும் அஸ்தமனத்தை முக்கடல் சங்கம கடற்கரையில் கண்டு ரசிக்கின்றனர். ஆனால் ஆண்டின் சில மாதங்களில் சூரிய அஸ்தமனத்தை காணமுடியாத நிலை உள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் கோவளம் கடற்கரைக்கு செல்கின்றனர். எனவே ஆண்டு முழுவதும் சுற்றுலாபயணிகள் சூரிய உதயம் மற்றும் அஸ்தமனத்தை ஒரே இடத்தில் நின்று கண்டு ரசிக்கும் வகையில் கடந்த 2002-ம் ஆண்டு 35 லட்சம் ரூபாய் செலவில் 52 அடி உயரத்தில் காட்சி கோபுரம் கட்டப்பட்டது. இதன் மேல்பகுதியில் கடலில் செல்லும் கப்பல்களை கண்டு ரசிக்கும் வகையில் நவீன டெலஸ்கோப் ஒன்று அமைக்கப்பட்டது.
இதில் பெரியவர்களுக்கு 3 ரூபாயும், சிறியவர்களுக்கு 2 ரூபாயும் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டு தனியாருக்கு குத்தகைக்கு விடப்பட்டது. இந்நிலையில் அ.தி.மு.க., ஆட்சி பொறுப்பேற்ற உடன் தனியாருக்கு வழங்கப்பட்ட காட்சிகோபுரம் குத்தகை ரத்து செய்யப்பட்டு நேற்று முதல் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிகழகம் தனது கட்டுபாட்டுக்குள் கொண்டு வந்தது. இனி காட்சிகோபுரத்தை நிர்வகிக்க தனியாக ஊழியர்களை நியமிக்க சுற்றுலா வளர்ச்சிகழகம் முடிவு செய்துள்ளது. அதே போல் கன்னியாகுமரி கடற்கரைசாலை சுற்றுலா அலுவலக வளாகத்தில் உள்ள விரைவு உணவகம், மற்றும் கடலில் உள்ள திருவள்ளுவர் சிலையில் உள்ள காபிஷாப் போன்றவையும் சுற்றுலாவளர்ச்சி கழகமே நிர்வகிக்கிறது.
No comments