Page Nav

HIDE

Grid

GRID_STYLE

Hover Effects

TRUE
{fbt_classic_header}

Latest News:

latest

Ads Place

அணைகள்

பேச்சிப்பாறை_அணை பேச்சிப்பாறை அணை (Pechiparai Reservoir) கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பெரிய அணையாகும். இது தமிழ்நாட்டில் கன்னியாகுமர...

பேச்சிப்பாறை_அணை
பேச்சிப்பாறை அணை (Pechiparai Reservoir) கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பெரிய அணையாகும். இது தமிழ்நாட்டில் கன்னியாகுமரி மாவட்டத்தில், மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரத்தில் பேச்சிப்பாறை என்னுமிடத்தில் அமைந்துள்ளது. 

இது மாவட்டத் தலைநகர் நாகர்கோவிலிலிருந்து 43 கிலோமீட்டர் (27 மைல்) தொலைவில் அமைந்துள்ளது. இவ் அணை கோதையாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது. இந்த அணை 1897-1906 காலகட்டத்தில் ஐரோப்பிய பொறியாளர் திரு மிஞ்சின் அவர்களால் அப்போதைய திருவிதாங்கூர் மகாராசா மூலம் திருநாள் காலத்தில் கட்டப்பட்டது. இதன் அப்போதைய கட்டுமானத்திற்காக செலவளிக்கப்பட்ட தொகை 26.1 லட்சம். 

இவ்வணை கன்னியாகுமரி மாவட்டத்தின் விவசாய மற்றும் குடிநீர் தேவையை பூர்த்தி செய்கின்றது. இவ்வணை மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடர் அடிவாரத்தில் கட்டப்பட்டுள்ளது. இந்த அணையின் உயரம் முதலில் 42 அடியாக இருந்தது. பின்பு 1964-ஆம் ஆண்டு மேலும் 6 அடிகள் கூட்ட முடிவு செய்து 1969 ஆம் ஆண்டு அணையின் உயரம் 48 அடியாக கட்டிமுடிக்கப்பட்டது. கல்குளம், அகத்தீசுவரம், தோவாளை மற்றும் ராதாபுரம் ஆகிய வட்டங்கள் இதன் மூலம் பலன் பெறுகின்றன. 

சுமார் 50 ஆயிரம் ஏக்கர் நிலம் இதனால் பாசன வசதி பெறுகின்றது. இதன் நீர்ப்பிடிப்பு பகுதி 207.19 சதுர கிலோமீட்டர்கள் ஆழம் 14.6 மீட்டர்கள் ( 48 அடி). அணையின் நீளம் 425.5 மீட்டர்கள் உயரம் 120.7 மீட்டர்கள் .இங்கு பேச்சியம்மன் பெயாில் சிறு கோயில் ஒன்று கட்டப்பட்டு தெய்வ வழிபாடும் நடைபெற்று வருகிறது.
மாம்பழத்துறையாறு அணை
மாம்பழத்துறையாறு அணை கன்னியாகுமரி மாவட்டத்தில் விவசாய பயன்பாட்டிற்காக கட்டப்பட்டுள்ள அணையாகும். இது வில்லுக்குறியிலிருந்துசுமார் 3 கட்டைத் (கிலோமீட்டர்) தொலைவில் ஆணைக்கிடங்கு என்னுமிடத்தில் மாம்பழத்துறையாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது. 

இந்த அணை 44.54 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்டது.80 அடி உயரமுள்ள இவ்வணையின் மூலம் 25 குளங்களும் 905.76 ஏக்கர் விவசாய நிலம் பாசன வசதிப் பெறுகின்றது. தமிழக அரசால் 2007ம் ஆண்டு ரூபாய் 20 கோடியே 97 லட்சம் செலவில் அணைக் கட்டுமானப்பணி தொடங்கப்பட்டு, 29 நவம்பர், 2010 அன்று முடிவடைந்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்துவிடப்பட்டது.
முக்கடல் அணை
முக்கடல் அணை வேம்பாறு குறுக்கே கட்டப்படுள்ளது. தமிழ்நாடு மாநிலத்தில் நாகர்கோவில் நகரில் இருந்து 10 கிமீ (6.2 மை)தொலைவில் அமைந்துள்ளது. நாகர்கோவில் நகரின் முக்கிய குடிநீர் ஆதரமாக விளங்குகிறது.
பெருஞ்சாணி அணை
பெருஞ்சாணி அணை கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள முக்கியமான அணையாகும். இது கன்னியாகுமரியிலிருந்து 85 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இது ஒரு சுற்றுலாத்தலமாகும். இவ்வணை 1948 இல் தொடங்கப்பட்டு 1958இல் கட்டி முடிக்கப்பட்டது. 50 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டது. 

இந்த அணையில் உண்டாக்கப்பட்ட நீர்த்தேக்கம் 33.34 சதுர மைல் பரப்பாகும். இந்நீர்த் தேக்கம் திருவனந்தபுரத்தின் தென்கிழக்கு, 58 கி.மீ. தொலைவிலும், குலசேகரம் என்னுமிடத்திலிருந்து 10 கி.மீ. கிழக்கிலும் எழிலுடன் அமைக்கப்பட்டுள்ளது. இந்த அணை மூலம் சுமார் 6000 ஏக்கர் நிலம் பாசனம் பெறுகிறது.

No comments




வரலாற்று தகவல்கள்
அறிவியல் தகவல்கள்
ஆன்மிகம்
பொது அறிவு
மகளிர் ஸ்பெஷல்