கன்னியாகுமரி மாவட்டம் சுற்றுலா தலங்கள் நிறைந்த மாவட்டமாகும். கன்னியாகுமரியில் பார்க்க வேண்டிய இடங்கள், கன்னியாகுமரியை சுற்றியுள்ள பகுதியில் காண வேண்டிய இடங்கள் மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தில் காண வேண்டிய மிகமுக்கிய இடங்கள் எவை என்பதை காணலாம்.
கன்னியாகுமரியில் காண வேண்டிய இடங்கள்
·
தேவி குமரி பகவதி அம்மன் திருக்கோவில் – காலை 04:30 மணி
முதல் 11:45 மணி வரையும், மாலை 05:30 மணி முதல் இரவு 08:45 மணி
வரையிலும் அம்மனை தரிசனம் செய்யலாம்.
·
சுவாமி விவேகானந்தர் பாறை நினைவு திருக்கோவில், இது கடலில்
அமைந்துள்ளது. இங்கு படகு மூலமாக செல்லவேண்டும். காலை 08:00 மணி முதல்
மாலை 04:00 மணி வரை படகுகள் இயக்கப்படுகிறது.
·
திருவள்ளுவரின் 133 அடி உயர சிலை. இது விவேகானந்தர் பாறையின் அருகில் உள்ள பாறையில்
அமைக்கப்பட்டுள்ளது. இதையும் படகு மூலம் சென்று பார்க்க வேண்டும்.
·
திரிவேணி சங்கமம்
·
பே வாட்ச் – வாட்டர் தீம் பார்க். மக்கள் மகிழ்ச்சியோடு கொண்டாட முழுமையாக
பொழுதுபோக்கு பூங்கா
·
மெழுகு சிலை மியூசியம் – Wax Museum. வாரநாட்களில்
காலை 10:00 மணி முதல் இரவு 07:00 மணி வரையிலும், ஞாயிறு மற்றும் பொது விடுமுறை நாட்களில் காலை 10:30
மணி முதல் இரவு 7:30 மணி வரையிலும் காணலாம்.
·
காந்தி நினைவு மண்டபம், காலை 07:00 மணி முதல்
மதியம் 12:00 மணி வரையிலும், மதியம் 02:00 மணி முதல் மாலை 06:00 மணி
வரையிலும் பார்வையிடலாம்.
·
காமராஜர் மணி மண்டபம்
·
Aqua World – மீன்களின் உலகம் கண்கவர் பூங்கா, காலை 06:00
மணி முதல் இரவு 09:00 மணி வரையிலும் காணலாம்.
·
ஸ்ரீ சங்கராச்சாரிய கோவில்
·
மேரி ரான்ஸம் தேவாலயம்
·
சூரிய உதயம் மற்றும் சூரிய அஸ்தமனம்
·
View Tower – காட்சி கோபுரம், Sunset Point
கன்னியாகுமரியை சுற்றியுள்ள இடங்கள்
Ø
குகநாத சுவாமி திருக்கோவில் – 1000 ஆண்டுகள்
பழமையானது
Ø
ராமர் கோவில், கொட்டாரம்
Ø
ஸ்ரீ சாய்பாபா திருக்கோவில், பொற்றையடி
Ø
மருத்துவாழ் மலை மேல் பகுதியில் அமைந்துள்ள மலைக்கோவில்
Ø
சுசீந்திரம் திருக்கோவில், பிரம்மா, விஷ்ணு, சிவா ஆலயம் – காலை 04:30
மணி முதல் காலை 11:45 மணி வரையிலும், மாலை 05:30 மணி முதல் இரவு 08:45 மணி
வரையிலும் தரிசனம் செய்யலாம்.
Ø
சுசீந்திரம் கோவிலில் பெரிய அளவில் காணப்படும் தாணுமாலையன் (அனுமன்)
சிலை. இது 18 அடி உயரம் கொண்டது.
Ø
18-ஆம் நூற்றாண்டை சேர்ந்த வட்டக்கோட்டை, மாலை 05:00 மணி வரை
கண்டு ரசிக்கலாம். இங்கு சினிமா சூட்டிங் அதிக அளவில் நடைபெறுகிறது.
Ø
விவேகானந்தா ஆஸ்ரமம்
Ø
திருப்பதி ஸ்ரீவெங்கடேஸ்வரா ஆலயம்
கன்னியாகுமரி மாவட்டத்தில் பார்க்க வேண்டிய இடங்கள்
v
நாகராஜா திருக்கோவில், நாகர்கோவில்
v
உதயகிரி கோட்டை, புலியூர்குறிச்சி
v
குமாரகோவில் சுப்பிரமணியன் திருக்கோவில்
v
புனித சவேரியார் பேராலயம், கோட்டார், நாகர்கோவில்
v
பீர் முஹம்மது அப்பா தர்ஹா, தக்கலை
v
திற்பரப்பு நீர்வீழ்ச்சி (குமரி குற்றாலம்)
v
மாத்தூர் தொட்டிப்பாலம், இருமலைகளுக்கு இடையே அமைக்கப்பட்டுள்ள
தண்ணீர் தொட்டி பாலம்
v
சிதறால் மலைக்கோவில்
v
முட்டம் கடற்கரை
v
சொத்தவிளை கடற்கரை
v
குளச்சல் துறைமுகம்
v
தேங்காய்பட்டணம் கடற்கரை