Page Nav

HIDE

Grid

GRID_STYLE

Hover Effects

TRUE
{fbt_classic_header}

Latest News:

latest

Ads Place

தமிழர் விளையாட்டுகள்

தமிழர் விளையாட்டுகள் தமிழ்நாட்டு நாட்டுப்புறங்களில் விளையாடப்பட்ட விளையாட்டுகள் 1. அச்சுப்பூட்டு இது சிறுவர்களின் கைத்திற விளையாட்ட...

தமிழர் விளையாட்டுகள்

தமிழ்நாட்டு நாட்டுப்புறங்களில் விளையாடப்பட்ட விளையாட்டுகள்

1. அச்சுப்பூட்டு

இது சிறுவர்களின் கைத்திற விளையாட்டு. இதனைக் குறி-விளையாட்டு எனவும் பாகுபடுத்திப் பார்க்கலாம்.

விளையாடும் முறை 

  • மூன்று புளியங்கொட்டை அடுக்குகள் பல வைக்கப்படும்.
  • உத்திக் கோட்டிலிருந்து மற்றொரு புளியங்கொட்டையால் அடித்துச் சிதறவைத்துத் தனதாக்கிக் கொள்ளலாம்.
  • ஒவ்வொருவராக அடித்து ஈட்டிக்கொள்ளலாம்.
  • அதிகம் ஈட்டியவர் வெற்றி.

2. அடிமுறை

அடிமுறை என்பது தமிழ்நாட்டுத் தற்காப்புக் கலை-விளையாட்டுகளில் ஒன்று. அடிமுறை விளையாட்டில் கையாலும் காலாலும் தாக்கி எதிராளியை வீழ்த்துவர்.

அடிமுறையில் அடவுகள்

அடிமுறை பயில்வோருக்கு 18 அடவுகள் சொல்லித் தரப்படும். அடவு என்பது முன்னும் பின்னும் கால்-தப்படி வைத்துக் கையை ஓட்டும் பாங்கு. இதில் எதிராளி வலிதாங்க மாட்டாமல் விழுவார். அவ்வளவுதான்.

அடிமுறையில் பாணிகள்

அடிமுறைத் தற்காப்பு விளையாட்டில் ஒற்றைச்சுவடு, அங்கச்சுவடு என இருவேறு பாணிகள் உண்டு

அங்கச்சுவடு

தேக்வொண்டோவில் உள்ள கால்உதை
கராத்தேயில் உள்ள கைக்குத்து
ஜுட்ஜூவில் உள்ள உள்பூட்டுகள்
ஜூடோவில் உள்ள தூக்கி எறிதல்
குங்பூவில் உள்ள கைவெட்டு
வர்மக்கலையில் உள்ள வர்ம-உறுப்பு தாக்கம்
ஆகிய அனைத்துக் கூறுகளையும் உள்ளடக்கமாய்க் கொண்டிருப்பதுதான் அடிமுறை விளையாட்டின் அங்கச்சுவடு.

பாவலா


முன்னால் ஓரடிப் பாவலா
பின்னால் ஓரடிப் பாவலா
என்று இப்படி ஈரடி, மூவடி, நாலடிப் பாவலாக்களும் உண்டு

மற்றும் முன்னுடான், பின்னுடான், துள்ளுடான் என்னும் பாங்குகளும் இதில் உண்டு.
3. அந்தக் கழுதை இந்தக் கழுதை

அந்தக் கழுதை இந்தக் கழுதை என்பது தாய்மார் அல்லது தலைவர்-ஒருவர் குழந்தையின் கண்ணைப் பொத்தி ஆளைக் காட்டச் சொல்லும் விளையாட்டு.

விளையாடும் முறை

அந்தக் கழுதை, இந்தக் கழுதை

மல்லிகா (விளையாடுவோரில் ஒருவர் பெயராக இருக்கும்) கழுதை

எங்கே போயிற்று

கண் பொத்தப்பட்டிருக்கும் குழந்தை மல்லிகா போன திசையைக் காட்டவேண்டும். காட்டிய திசை சரி ஆயின் மல்லிகா கண் பொத்தப்படும். தவறு ஆயின் மீண்டும் பொத்தப்பட்டவர் கண்ணே பொத்தப்படும். இவ்வாறு ஆட்டம் தொடரும்.

4. அய்யன் கொம்பு 

அய்யன் கொம்பு என்பது பேசும் குழந்தையிடம் தாய்மார் விளையாடும் விளையாட்டு. இது குழந்தையைப் பேசப் பழக்கும் விளையாட்டு.

பேசும் குழந்தையின் விரலை ஒவ்வொன்றாகப் பிடித்துக்கொண்டு ‘இது யார்க் கொம்பு, அய்யன் கொம்பு … என்று பாடி மகிழ்விக்கும் விளையாட்டு.

உரையாட்டுப் பாடல்

தாய்குழந்தை
யார் கொம்புஅய்யன் கொம்பு
அய்யன் எங்கேபூப் பறிக்க
பூ எங்கேதண்ணிக்குள்ளே
தண்ணி எங்கேஆடுமாடு குடிச்சுபுடுத்து
ஆடுமாடு எங்கேகுச்சியிலே (குச்சி = ஆடுமாடு அடைத்துவைக்கும் தொழுவம்)
குச்சி எங்கேதீயிலே எரிஞ்சுப் போச்சு
சாம்பல் எங்கேபல் விளக்கியாச்சு
வெட்டவா, குத்தவா, வெந்நித் தண்ணி ஊத்தவா!

இவ்வாறு சொல்லிவிட்டுக் குழந்தையைத் தாய் செல்லமாகக் கிள்ளுவாள்.

5. அட்டலங்காய் புட்டலங்காய்
அட்டலங்காய் புட்டலங்காய் என்னும் விளையாட்டு பேச முயலும் குழந்தையிடம் தாய்மார் பேசி மகிழ்விக்கும் விளையாட்டு.

பல குழந்தைகளைக் கால்களை நீட்டிக்கொண்டு வரிசையாக உட்கார வைத்து அவர்களின் கால்களை ஒவ்வொன்றாகத் தொட்டுத் தாய்மார் பாட்டுப்பாடுவர்.

விளையாடும் முறை

அட்டலங்காய் புட்டலங்காய் … (பலமுறை சொல்லப்படும்)
உப்புக்கண்டம் போட்டு
உரிமேலே வை
எந்தப் பூனை தின்றது
இந்தப்பூனை தின்றது

கடைசியில் தொடும் காலைச் செல்லமாகக் கிள்ளுவர்.

6. அத்தளி புத்தளி 

அத்தளி புத்தளி என்பது குழந்தையைப் பேசவைக்கும் விளையாட்டு.

விளையாடும் முறை

பல குழந்தைகளின் கையைத் தரையில் வைக்கச் சொல்லி ஒவ்வொரு குழந்தையின் கையையும் வரிசையாகத் தொட்டு ‘அத்தளி, புத்தளி, மச்சான், மாமன் … உன் அப்பன் பெயரென்ன’ என்று பெயர் கேட்டு விளையாடும் விளையாட்டு.

குழந்தை தன் தந்தையின் பெயரைச் சொல்லவேண்டும்.

இவ்வாறு உறவுகளை மாற்றி மாற்றி கூறி குழந்தைகளை அவர்களின் பெயர்களை சொல்ல வைக்க வேண்டும்
.
7. அம்மானை

அம்மானை என்பது தமிழ்நாட்டு மகளிர் விளையாட்டாகும். மூன்று பெண்கள் அமர்ந்து அம்மானைக் காயை வீசி விளையாடும் விளையாட்டாகும். இது விளையாட்டாக இருந்தாலும், கவிதை புனையும் அறிவுப்பூர்வமான அமைப்புடையதாக இருந்ததால் இவ்விளையாட்டு இலக்கிய வடிவம் பெற்றது.

ஒருவர் ஆடுவது சங்ககாலப் பந்து விளையாட்டு. மூவர், ஐவர் எனக் கூடிப் பாட்டுப் பாடிக்கொண்டு ஆடுவது அம்மானை விளையாட்டு. இது அண்மைக்காலம் வரையில் தஞ்சைப்பகுதி அந்தணர் இல்லங்களில் விளையாடப்பட்டு வந்தது. 

அமைப்பு


மகளிர் மூவர், ஏதோ ஓரு பொதுவான செய்தியையோ, அரசன் புகழையோ, இறைவன் அருளையோ பாடி அவர்களை அடைய வேண்டும் என்ற ஆசையோடு அம்மானைக் காயை வீசி விளையாடும் விளையாட்டே “ அம்மானை “ விளையாட்டாக அமைந்தது. இவ்விளையாட்டில் மூன்று பெண்கள் அம்மானைக் காய்களை ஏந்தி நிற்பர். முதற்பெண், யாரேனும் பாட்டுடைத் தலைவனை மனதில் கொண்டு பொதுவான ஒரு செய்தியை கூறிக் காயை வீசிப் பிடித்து 'அம்மானை' என்பாள். இரண்டாமவள் அப்பொதுச் செய்தியோடு பொருந்திய ஒரு வினாவைக் கேட்டுக் காயை வீசி 'அம்மானை' என்பாள். மூன்றாமவள் அவ்வினாவிற்கு இரு பொருள்படும்படி விடை கூறி காயை வீசிப் பிடித்து 'அம்மானை' என்பாள். இதுவே 'அம்மானை' விளையாடும் முறையாகும். சான்றாகத் திருவெங்கைக் கலம்பகத்து அம்மானைப் பாடலை எடுத்துக் கொள்வோம். இப்பாடலை பிள்ளைப் பெருமாள் அய்யங்கார் பாடியுள்ளார். அப்பாடலாவது,

முதற்பெண் (பொதுச்செய்தி)

“தேனமருஞ் சோலைத் திருவரங்கர் எப்பொருளு

மானவர் தாம் ஆண்பெண் அலியலர் காணம்மானை”

வண்டுகள் விரும்பும் சோலைகள் சூழ்ந்த திருவரங்கநாதர் எல்லாப் பொருளாகவும் திகழ்வாராயினும் ஆணும் பெண்ணும் அலியும் அல்லர் அம்மானை.

இரண்டாவது பெண் (வினா)

“ஆனவர் தாம் ஆண் பெண் அலியலரே யாமாகில்

சானகியை கொள்வரோ தாரமாய் அம்மானை? ”

அவ்வாறான திருவரங்கர் ஆணும் பெண்ணும் அலியும் அல்லாதவரேயானால் சீதையை மணந்தது ஏன்.?

மூன்றாவது பெண் (விடை)

“தாரமாய் கொண்டது மோர் சாபத்தாலம்மானை”

சீதையை மணந்ததும் ஒரு சாபத்தால் அம்மானை. சாபம் -பிருகு முனிவர் சாபத்தால், சிவபிரானது வில்லால் என்னும் இருபொருள் பட விடை கூறி அம்மானைக் காயை வீசிப் பிடித்தாள்.

சிலப்பதிகாரத்தில் அம்மானை

கி.பி.2 ஆம் நூற்றாண்டில் அம்மானை முதன் முதலாக இலக்கிய வடிவம் பெற்றது. நாட்டார் வாய்மொழி இலக்கியத்தை முதன்முதலில் இலக்கியத்தில் பதிவு செய்த இளங்கோவடிகளே அம்மானையையும் சிலப்பதிகாரத்தில் பதிவு செய்துள்ளார். சிலப்பதிகாரத்தில் வாழ்த்துக் காதையில் 'அம்மானை வரி' என்ற பகுதியில் நான்கு பாடல்கள் அமைந்துள்ளது. இப்பாடல்களில் சோழ மன்னர்கள், மனுநீதிச் சோழன், கரிகால் சோழன், சிபி மன்னன், தூங்கெயில் எறிந்த தொடிதோட் செம்பியன் ஆகியோரின் அருஞ் செயல்களைப் பாடி அவர்களை அடைய வேண்டும் என்று மூவர், சோழர்களின் தலைநகரான பூம்புகார் நகரைப் பாடுவதாக அமைந்துள்ளது.

மாணிக்கவாசகரின் திருவம்மானை

மாணிக்கவாசகர் அருளிச் செய்த அம்மானைப் பாட்டு திருவாசகத்தின் ஒரு பகுதியாக 'திருவம்மானை' என்று விளங்குகிறது. இது இறைவன் திருவருளைப் பெற வேண்டிப் பாடி, ஆடிய அம்மானையாதலால் 'திரு' என்று அடைமொழி கூட்டி திருவம்மானை எனப்பட்டது. இப்பாட்டு பலர் நின்று தத்தம் முறை வரும்போது ஒவ்வொரு கருத்தைப் பாடலாகப் பாடி ஆடும் முறையாக அமைந்திருக்கின்றது. எனவே இவ்விளையாட்டில் மூவர் என்ற வரையறை இன்றி சூழ்நிலைக்கேற்ப எத்தனை பேர் வேண்டுமானாலும் ஆடலாம் எனக் கொள்ளலாம். மாணிக்கவாசகர், அரசன், வள்ளல்களன்றி இறைவன் அருளை வேண்டி அம்மானையாகப் பாடியுள்ள முறை பிற்காலத்தில் சிற்றிலக்கியங்களாக பெரும் வளர்ச்சி அடைந்துள்ளது.


குமரகுருபரர் இவ்வம்மானைப் பாடல்களைத் தாம் பாடிய மதுரைக் கலம்பகம், காசிக் கலம்பகம் ஆகிய நூல்களில் ஒரு கலம்பக உறுப்பாக வைத்துப் பாடியுள்ளனர். குமரகுருபரர் தாம் பாடிய மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழில் மீனாட்சியம்மையின் பெருமைகளை உணர்த்தும் வகையில் பத்து அம்மானைப் பாடல்களைப் பாடியுள்ளார்.

இலக்கிய வரலாற்றுச் சான்றுகள்

கி.பி.1640 ஆம் ஆண்டைச் சேர்ந்த இராமப்பய்யன் அம்மானை மூலம் நாயக்கர் வரலாற்றை அறிய முடிகிறது. [1] கிறித்துவத் தமிழ்த் தொண்டரான வீரமாமுனிவர் 'கித்தேரி கேத்ரின் அம்மாள் அம்மானை' என்ற நூலையும், இசுலாமியத் தமிழ்த் தொண்டரான உமறுப்புலவர் மகன் கவிக்களஞ்சியப் புலவர் 'அம்மானை' என்ற நூலையும், சையத் மீராப் புலவர் காலிப் அலியைத் தலைவனாகக் கொண்டு 'பரத்தியர் அம்மானை' என்ற நூலையும் பாடியிருக்கின்றனர்
.
8. அணில் பிள்ளை 

அணில் பிள்ளை சிறுவர் விளையாடும் தமிழக நாட்டுப்புற விளையாட்டுகளில் ஒன்று. 1950ஆம் ஆண்டுக்குப் பின்னர் இது படிப்படியாகக் குறைந்துவருகிறது.

விளையாடும் முறை
  • சதுரத்தை நான்காகப் பிரிக்கும் அரங்கம்.
  • நடுவில் 4 பழங்கள்.
  • வெளிக்கோடுகளில் ஒடும் நால்வர் அணில்.
  • குறுக்குக் கோட்டில் ஓடுபவர் தொடும் காவலாளி.
  • காவலாளியிடம் பிடிபடாமல் அணில் பழத்தை எடுக்கும் விளையாட்டு.

அதிக பழங்களை எடுத்தவர்வெற்றி.

9. ஆனமானத் திரி

விளையாடும் முறை
  • இரண்டு அணிகள்.
  • துண்டுத் துணியில் முறுக்கிய திரி.
  • ஒரு அணியிலுள்ளவர் திரியைக் கால் கட்டைவிரல் இடுக்கில் பற்றிக் கரணம் போட்டுக் காலால் எறிய வேண்டும்.

எதிரணியினர் பிடிக்க வேண்டும். 
  • பிடித்தால் பிடித்த அணியினர் எதிரணியினர் மேல் குதிரை ஏறலாம்.
  • பிடிக்காவிட்டால் எறிந்தவர் அணி குதிரை ஏறும்.

இரண்டு அணிகளாகப் பிரிந்து விளையாடின் இந்த ஆட்டம் ஆனமானத்திரி எனப் பெயர் பெறும். குழுவாகச் சேர்ந்து விளையாடினால் கரணப்பந்து எனப் பெயர் பெறும்.

10. ஆடும் ஓநாயும் 

ஆடும் ஓநாயும் என்னும் தமிழக நாட்டுப்புற விளையாட்டு 1950ஆம் ஆண்டுக்குப் பின்னர் படிப்படியாக மறைந்துவருகிறது.

விளையாடும் முறை

தலைவனைப் பின்தொடர்ந்து அனைவரும் காலால் தேய்த்து அரங்கக் கட்டம் போடுவர். முதலில் தலைவன் ஓநாய். பிறர் ஆடு. ஓநாயிடம் பிடிபடாமல் ஆடுகள் ஓடும். ஓநாய் ஒரு ஆட்டைப் பிடித்தவுடன் அந்த ஆடு ஓநாயின் இடுப்பைப் பின்னால் பிடித்துக்கொண்டு ஓநாயுடன் பின்னால் ஓடவேண்டும். இப்படிப் பிடிபட்ட ஆடுகள் அத்தனையும் அடுத்தடுத்து உள்ளவர் இடுப்பைப் பிடித்துக்கொண்டு அறுபடாமல் ஓட வேண்டும். அறுபட்டால் அறுபட்டவர் ஆட்டத்திலிருந்து வெளியேற்றப்படுவார். ஏனையோர் விளையாடுவர். பிடிபட்ட ஆடுகளை இழுத்துக்கொண்டு ஓடுவது ஓநாய்க்குக் கடினம்.

பிடிபடாமல் கடைசியில் இருப்பவர் திறமைசாலி.

No comments




வரலாற்று தகவல்கள்
அறிவியல் தகவல்கள்
ஆன்மிகம்
பொது அறிவு
மகளிர் ஸ்பெஷல்