Page Nav

HIDE

Grid

GRID_STYLE

Hover Effects

TRUE
{fbt_classic_header}

Latest News:

latest

Ads Place

Valluvar Statue

அய்யன் திருவள்ளுவர் சிலை அய்யன் திருவள்ளுவர் சிலை  என்பது  திருக்குறள்  எழுதிய  திருவள்ளுவருக்கு   தமிழ்நாடு அரசு   கன்னியாகுமரிக் கடல...

அய்யன் திருவள்ளுவர் சிலை
அய்யன் திருவள்ளுவர் சிலை என்பது திருக்குறள் எழுதிய திருவள்ளுவருக்கு தமிழ்நாடு அரசு கன்னியாகுமரிக்கடலில், கடல் நடுவே, நீர் மட்டத்திலிருந்து 30 அடி உயரமுள்ள பாறை மீது அமைத்த 133 அடி உயரச் சிலை ஆகும். இந்த சிலை அமைக்கும் பணி 1990செப்டம்பர் 6 இல் தொடங்கப்பட்டு 2000சனவரி 1 இல் திறக்கப்பட்டது.
சிலை அமைப்பு
  • திருவள்ளுவர் சிலை பல கற்களைக் கொண்டு கட்டப்பட்ட பல மாடிக் கட்டிடம் போன்ற அமைப்பு கொண்டதாகும். உலகில் இதுபோன்ற கருங்கற்களால் ஆன சிலை கிடையாது.
  • சிலையினுள் 130 அடி உயரம் வரை வெற்றிடம் உள்ளது. இந்த வெற்றிடம் சிலையின் ஸ்திரத் தன்மையை உறுதிப்படுத்தும் நுட்பமுடையது. கல்லால் ஆன உத்திரங்களும், கட்டாயங்களும் பரவப்பட்டு சிலை எப்பக்கத்திலும் சாய்ந்து விடாது நேரே நிற்குமாறு உறுதி செய்யப்பட்டுள்ளது.
  • பீடத்தின் 38 அடி உயரமானது திருக்குறளின் அறத்துப்பாலின் 38 அதிகாரங்களையும், பீடத்தின் மேல் நிற்கும் 95 அடி உயரச் சிலையானது திருக்குறளின் பொருள் மற்றும் இன்பத்துப்பாலின் 95 அதிகாரங்களையும் குறிப்பதாகத் திகழ்கின்றது.
  • மண்டபத்தின் உட்புறச் சுவற்றில் ஒவ்வொரு அதிகாரத்திலிருந்து ஒரு குறள் வீதம் 133 குறட்பாக்கள் தமிழிலும் அவற்றுக்கு நிகராக ஆங்கில மொழி பெயர்ப்பிலும் பொறிக்கப்பட்டுள்ளன.
சிலை குறிப்புகள்
  1. மொத்த சிலையின் உயரம் - 133 அடி
  2. சிலையின் உயரம் - 95 அடி
  3. பீடத்தின் உயரம் - 38 அடி
  4. சிலையின் உருவாக்கம் - 3 டன் முதல் 8 டன் வரை எடையுள்ள 3681 கருங்கற்களைக் கொண்டு நிறுவப்பட்டுள்ளது.
  5. சிலையின் மொத்த எடை - 7,000 டன்
  6. சிலையின் எடை - 2,500 டன்
  7. பீடத்தின் எடை - 1,500 டன்
  8. பீடத்தைச் சுற்றி அமைந்துள்ள மண்டபத்தின் எடை - 3,000 டன் 
சிலை அளவுகள்
  1. முக உயரம் - 10 அடி
  2. கொண்டை - 3 அடி
  3. முகத்தின் நீளம் - 3 அடி
  4. தோள்பட்டை அகலம் -30 அடி
  5. கைத்தலம் - 10 அடி
  6. உடம்பு (மார்பும் வயிறும்) - 30 அடி
  7. இடுப்புக்குக் கீழ் தொடை மற்றும் கால் - 45 அடி
  8. கையில் ஏந்திய திருக்குறள் ஏட்டின் நீளம் - 10 அடி

No comments




வரலாற்று தகவல்கள்
அறிவியல் தகவல்கள்
ஆன்மிகம்
பொது அறிவு
மகளிர் ஸ்பெஷல்