Page Nav

HIDE

Grid

GRID_STYLE

Hover Effects

TRUE
{fbt_classic_header}

Latest News:

latest

Ads Place

சிதறால் மலைக்கோவில்

Chitharal Cave Temple சிதறால் மலைக் கோவில்  ( Chitharal Jain Monuments )  கன்னியாகுமரி  மாவட்டத்திலுள்ள ‘சிதறால்’ என்ற ஊரில் ‘திருச்சா...

Chitharal Cave Temple
சிதறால் மலைக் கோவில் (Chitharal Jain Monumentsகன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள ‘சிதறால்’ என்ற ஊரில் ‘திருச்சாணத்து மலையில்’ இருக்கும் மிகப் பெரிய குகைக்கோவிலாகும்.நாகர்கோவிலிருந்து 45 கட்டை (கிலோமீட்டர்) தொலைவில் இது அமைந்துள்ளது. இந்த கோயிலின் உள்ளும், புறமும் சமணச் சிற்பங்கள் ஏராளமாக உள்ளன. இந்த குகைக் கோயில் 13 ஆம் நூற்றாண்டில் பகவதி கோயிலாக மாற்றப்பட்டது. எனினும், கோயிலுக்குள் இருக்கும் தீர்த்தங்கரர்கள் மற்றும் உப தேவதைகளின் சிற்பங்கள் எவ்வித மாற்றமும் இன்றி அப்படியே பாதுகாக்கப்பட்டு வருகிறது. நூற்றாடண்டு பழமை வாய்ந்த இந்த சமண மதக் கோவிலில் மகாவீரர், மற்றும் 23 தீர்த்தங்கர்களின் சிலைகள் பாறைகளில் செதுக்கப்பட்டிருக்கின்றன. இந்த கோவில் தொல்பொருள் ஆய்வுத் துறையின் கட்டுப்பாட்டில் பராமரிக்கப்பட்டு வருகின்றது.

முக்கியத்துவம்
உலகப் புகழ்பெற்ற இந்த திருச்சாணத்து மலையைப் பற்றி நமது முன்னாள் பிரதமர் திரு. பண்டித நேரு, சீனா பயணம் மேற்கொண்டிருந்த போது திரு. சுவன்லாய், நேருவிடம் விசாரித்தார். அந்த அளவுக்கு புகழ்வாய்ந்த சமணக் கோயிலாக விளங்கியது சிதறால் கோயில். நேருவின் வேண்டுகோளின்படி இன்று அக்கோயில் தொல்பொருள் பாதுகாப்புத் துறையின் கீழ் இருந்து வருகிறது ‘சிதறால் அம்மா’ என்ற பேரில் இந்துக் கோயிலாக இவை இருந்து வருகிறது. திருவிதாங்கூர் ஆண்டு வந்து ஸ்ரீமூலம் திருநாள் (இவருடைய காலம் 1885-1924) காலத்தில் இக்கோயிலில் ‘சிதறாலம்மா’ என்ற பகவதி பிரதிஷ்டை செய்யப்பட்டது.
சுற்றுலாத் திருவிழா
ஆண்டுதோறும் அரசு சார்பாக சுற்றுலா விழாவானது வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகின்றது. 2009-ம் ஆண்டு ஒரு நாள் விழாவாகத் தொடங்கப்பட்ட மலைக்கோயில் சுற்றுலா விழா, 2010ம் ஆண்டு முதல் 3 நாள் விழாவாக மாற்றப்பட்டுள்ளது. இங்குள்ள சமண குடைவரைக் கோயில் ஒரு வரலாற்றுச் சிறப்பு வாய்ந்ததாகும்.
கல்வெட்டு
கிமு முதல் நூற்றாண்டைச் சேர்ந்த சமணப்பலகலைகழகம் ஒன்று இங்கே இருந்த்தாகவும், அவர்களுக்கு குறத்தியறையார் என்ற அரசி நிபந்தமாக சொத்துக்களை அளித்தது பற்றிய ஒரு கல்வெட்டு அங்கே உள்ளது. அந்த கல்வெட்டு தமிழ்-பிராமி மொழியில் உள்ளது.

No comments




வரலாற்று தகவல்கள்
அறிவியல் தகவல்கள்
ஆன்மிகம்
பொது அறிவு
மகளிர் ஸ்பெஷல்