Page Nav

HIDE

Grid

GRID_STYLE

Hover Effects

TRUE
{fbt_classic_header}

Latest News:

latest

Ads Place

Kumari Sangamam

குமரி சங்கமம்
குமரி சங்கமம் 2011 கன்னியாகுமரி மாவட்ட நாட்டுப்புற இசை, கலை, ஆட்டம், பண்பாடு மற்றும் உணவு பழக்கவழக்கங்களை பாதுகாத்து வளர்க்கவும், சாதி மதத் ஏற்றத் தாழ்வுகளை அகற்றவும், மனித ஆற்றலைக் ஆக்கப்பூர்வமாக பயன்படுத்தவும் தமிழக அரசால் கொண்டாடப்பட்ட கலாச்சாரத் திருவிழா ஆகும். இந்த கலைவிழா 2011-ஆம் ஆண்டு, ஜனவரி 5 முதல் 30 வரை கன்னியாகுமரி மாவட்டத்தின் பல இடங்களிலும் கொண்டாடப்பட்டது, சுமார் 900 -க்கும் மேற்பட்ட கலைஞர்கள் கலை நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினர். இதனை தமிழ் மையம் என்ற வணிக நோக்கற்ற தமிழ் ஆர்வல நிறுவனத்தால் நடத்தப்பட்டது.
உணவுத் திருவிழா
ஜனவரி 28, 29, 30 ஆகிய நாட்களில் எஸ். எல். பி பள்ளி மைதானத்தில் நடைபெற்றது. பனங்கிழங்கு, கூவக் கிழங்கு, காய்ச்சி கிழங்கு, அச்சு முறுக்கு, முந்திரிக்கொத்து, பணியாரம், பழ ரோஸ்ட், கறுப்பு அல்வா, விரலி இலை – பனை ஓலைக் கொழுக்கட்டைகள், குழல் அப்பம், மோதகம், மரச்சீனிக் கிழங்கு, வஞ்சிரம், நெத்திலி, சாலை வறுத்த கறி, இறால் மசாலா, சுறா புட்டு, சூரை, தோடு, வெள மீன் கறி, நண்டு மசாலா, மாங்காய், நார்த்தங்காய் ஊறுகாய், இஞ்சித்தீயல், இஞ்சிப் பச்சடி, உருளை போரியல், புட்டு-பயிறு-பப்படம், சம்பா அரிசிச் சோறு, சாம்பார், பருப்பு, புளிசேரி, அடை பாயாசம், பால் பாயாசம், பருப்பு பாயாசம் இவற்றோடு பல உணவு வகைகள் கடைகளில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தன.
கிராமிய விளையாட்டுக்கள்
மறந்து வரும் கிராமப்புற விளையாட்டுகளை நினைவு படுத்தும் வகையில் ஓணப்பந்து, தள்ளும் புள்ளும், ஒற்றை பந்து, சிலம்பாட்டம் போன்ற பல்வேறு நிகழ்வுகள் மாவட்டத்தின் பல பகுதிகளில் நடத்தப்பட்டது
கட்டுமரப் போட்டி
கன்னியாகுமரி கடலில் கட்டுமர போட்டி நடைபெற்றது. 40 கட்டுமரங்கள் பங்கேற்ற இந்த போட்டியில் நிரோடியை சார்ந்த நிக்கோலஸ் குழுவினர் முதல் பரிசை பெற்றனர். குறும்பனை இரண்டாம் இடத்தையும், மேல மணக்குடி மூன்றாம் இடத்தையும் பெற்றது. இவர்களுக்கு முறையே 25, 20, 15 ஆயிரம் ரூபாய் பரிசுகளை நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி வழங்கினார்.
குமரி சங்கமம் இசைத்தட்டு
குமரி சங்கம விழாவினை முன்னிட்டு வெளியிடப்பட்ட இசைத் தட்டில் குமரி சங்கமத்தின் மையநோக்குப் பாடல் உள்ளிட்ட ஒன்பது பாடல்களும் மையநோக்குப்பாடல் அறிமுக உரையும் இடம்பெற்றுள்ளன.
குமரி சங்கமம் இசைத்தட்டு
பாடல்கள்
மெட்டமைத்தவர்
பாடியவர்
மூன்று கடல்
ஜெகத்கஸ்பார்
கார்த்திக், சத்யன், சின்மயி
மையநோக்குப்பாடல் அறிமுகம்
ஜெகத்கஸ்பார்
மூன்று கடல்
ஜெகத்கஸ்பார்
கார்த்திக், சத்யன், சின்மயி
அகர முதல
நெல்லை ஜேசுராஜ்
கார்த்திக், கல்பனா
கார் நடக்கும்
திசை ஜெரி
திப்பு
சிறுதீபங்கள்
Adaptation
பாம்பே ஜெயஸ்ரீ
நிறை நீர
ஜெகத்கஸ்பார்
கார்த்திக்
தூங்காமை கல்வி
எம்பார் கண்ணன்
சின்மயி
மற மானம்
ஜெகத்கஸ்பார்
திப்பு, சுல்தானா
என்றுமொருவுதல் வேண்டும்
ஜெகத்கஸ்பார்
ஜெகத்கஸ்பார்
குமரி சங்கமம் பாடல் வீடியோ




வரலாற்று தகவல்கள்
அறிவியல் தகவல்கள்
ஆன்மிகம்
பொது அறிவு
மகளிர் ஸ்பெஷல்