Page Nav

HIDE

Grid

GRID_STYLE

Hover Effects

TRUE
{fbt_classic_header}

Latest News:

latest

Ads Place

தமிழக நகராட்சிகள்

தமிழக நகராட்சிகள் தமிழ்நாட்டில் மாநகராட்சிக்கு அடுத்த நிலையில் அதிகமான மக்கள் தொகையுடன் அதிக வருவாயுடைய ஊர்களை நகராட்சிகளாகப் பிரித்துள...

தமிழக நகராட்சிகள்

தமிழ்நாட்டில் மாநகராட்சிக்கு அடுத்த நிலையில் அதிகமான மக்கள் தொகையுடன் அதிக வருவாயுடைய ஊர்களை நகராட்சிகளாகப் பிரித்துள்ளனர். இந்த நகராட்சிகளுக்கு அரசு அதிகாரிகள் நகராட்சி ஆணையாளர்களாக அரசின் மூலம் நியமிக்கப்படுகின்றனர். இந்த நகராட்சிக்கு உட்பட்ட வார்டுகளில் இருந்து நகர்மன்ற உறுப்பினர்கள் மக்களால் தேர்வு செய்யப்படுகின்றனர். நகர்மன்றத் தலைவர் மக்களால் நேரடி தேர்தல் மூலம் தேர்வு செய்யப்படுகின்றார். இவருக்கு அடுத்தபடியாக நகர்மன்றத் துணைத் தலைவர் நகர்மன்ற உறுப்பினர்களால் தேர்வு செய்யப்படுகின்றார். நகர்மன்ற உறுப்பினர்களைக் கொண்டு நடத்தப்படும் நகராட்சி மன்றக் கூட்டங்களில் நிறைவேற்றப்படும் தீர்மானங்களின்படி ஆணையாளர் அந்தப் பணிகளை தனக்கு கீழுள்ள அலுவலர் மற்றும் ஊழியர்களைக் கொண்டு செயல்படுத்துகிறார். தமிழ்நாட்டில் மொத்தம் 150 நகராட்சிகள் இருக்கின்றன. இவை சிறப்பு நிலை, தேர்வு நிலை, முதல் நிலை, இரண்டாம் நிலை மற்றும் மூன்றாம் நிலை என்கிற நிலைகளில் தரம் பிரிக்கப்பட்டுள்ளன. இந்த நகராட்சிகள் அனைத்தும் தமிழ்நாடு நகராட்சி நிர்வாக ஆணையர் தலைமையிலான அலுவலகத்தின் கீழ் இயங்குகின்றன.

தமிழக உள்ளாட்சி அமைப்பான நகராட்சிகள் அரசியலமைப்பு 74 வது திருத்தச் சட்ட செயல் 1992ன் விதி 243 டபுள்யூ நகராட்சிகள் அமைக்க, அதற்கு அதிகாரங்களை வழங்க வழி செய்கின்றது. அதன் படி இது ஒரு மாநில அரசிடமிருந்து அதிகாரப் பகிர்வைப் பெற்றத் தன்னாட்சி அமைப்பாக தமிழகத்தில் செயல்படுகின்றது. தமிழகத்தில் நகராட்சி அமைப்புச் சட்டத்தின் படி தற்போது 49 மூன்றாம் படி நிலை நகராட்சிகள் உட்பட 148 நகராட்சிகள் இயங்குகின்றன.

நகராட்சிகள் நிலை
தமிழ்நாட்டில் உள்ள நகராட்சிகள்
சிறப்பு நிலை நகராட்சிகள்
ஆவடி · உதகமண்டலம் · கடலூர் · கரூர் · காஞ்சிபுரம் · கும்பகோணம் · கொடைக்கானல் · கோவில்பட்டி · தாம்பரம் · திருவண்ணாமலை · பல்லாவரம் · பொள்ளாச்சி · மறைமலைநகர் · சிவகாசி · காரைக்குடி · ராஜபாளையம் ·
தேர்வுநிலை நகராட்சிகள்
ஆம்பூர் · ஆத்தூர் (சேலம்) · இராணிப்பேட்டை · உடுமலைப்பேட்டை · கத்திவாக்கம் · குன்னூர் · குனியமுத்தூர் · கோபிச்செட்டிப்பாளையம் · கௌண்டம்பாளையம் · சிதம்பரம் · தருமபுரி · திருச்செங்கோடு · திருவேற்காடு · திண்டிவனம் · துறையூர் · தேனி அல்லிநகரம் · நாகப்பட்டினம் · நாமக்கல் · பழனி · பட்டுக்கோட்டை · பம்மல் · புதுக்கோட்டை · மன்னார்குடி · மயிலாடுதுறை · மேட்டுப்பாளையம் · மேட்டூர் · வால்பாறை · வாணியம்பாடி · விழுப்புரம் · விருதுநகர் ·
முதல் நிலை நகராட்சிகள்
அரக்கோணம் · அருப்புக்கோட்டை · அறந்தாங்கி · ஆரணி · ஆற்காடு · இராமநாதபுரம் · இராசிபுரம் · எடப்பாடி · கள்ளக்குறிச்சி · கடையநல்லூர் · கம்பம் · கிருஷ்ணகிரி · குளச்சல் · குடியாத்தம் · குமாரபாளையம் · சங்கரன்கோவில் · சத்தியமங்கலம் · சிவகங்கை · செங்கல்பட்டு · தாராபுரம் · தேவக்கோட்டை · திருவள்ளூர் · திருவாரூர் · திருவில்லிபுத்தூர் · திருத்தங்கல் · திருப்பத்தூர் (வேலூர்) · தென்காசி · பண்ருட்டி · பல்லடம் · பரமக்குடி · பேராவூரணி · போடிநாயக்கனூர் · பூந்தமல்லி · மணப்பாறை · வந்தவாசி · விருத்தாச்சலம் ·
2-ஆம் நிலை நகராட்சிகள்
அம்பாசமுத்திரம் · அரியலூர் · அனகாபுத்தூர் · ஆனையூர் · இராமேஸ்வரம்  · உசிலம்பட்டி · காயல்பட்டினம் · கலசப்பாக்கம் · கீழக்கரை · குழித்துறை · குளித்தலை · கூடலூர் (நீலகிரி) · கூடலூர் (தேனி) · கூத்தாநல்லூர் · சாத்தூர் · சின்னமனூர் · சீர்காழி · செங்கோட்டை · திருத்துறைப்பூண்டி · திருமங்கலம் · திருவதிபுரம் · திருத்தணி · துவாக்குடி · நரசிங்கபுரம் · நெல்லியாளம் · நெல்லிக்குப்பம் · பள்ளிபாளையம் · பத்மனாபபுரம் · பவானி · பெரம்பலூர் · பெரியகுளம் · பேரணாம்பட்டு · புஞ்சைப்புளியம்பட்டி · புளியங்குடி · மதுராந்தகம் · மேலூர் · வாலாசாபேட்டை  · விக்கிரமசிங்கபுரம்  · வெள்ளக்கோயில் · வேதாரண்யம் · ஜெயங்கொண்டம் · ஜோலார்பேட்டை ·
3-ஆம் நிலை நகராட்சிகள்
புழுதிவாக்கம் · மதுரவாயல் · மணலி · மேல்விசாரம் · வளசரவாக்கம் ·

No comments




வரலாற்று தகவல்கள்
அறிவியல் தகவல்கள்
ஆன்மிகம்
பொது அறிவு
மகளிர் ஸ்பெஷல்