Page Nav

HIDE

Grid

GRID_STYLE

Hover Effects

TRUE
{fbt_classic_header}

Latest News:

latest

Ads Place

அழகு குறிப்புகள்

தலை அரிக்குதா? தயிரும், வெந்தயமும் போதும்! கூந்தலின் மிக முக்கிய எதிரி பொடுகு. தலையில் அரிப்பையும், செதில் செதிலாக உதிர்ந்து ஒரு வித ...

தலை அரிக்குதா? தயிரும், வெந்தயமும் போதும்!
கூந்தலின் மிக முக்கிய எதிரி பொடுகு. தலையில் அரிப்பையும், செதில் செதிலாக உதிர்ந்து ஒரு வித தாழ்வு மனப்பான்மையையும் ஏற்படுத்தும். குளிர் காலத்தில் பொடுகுத் தொல்லை அதிகம் ஏற்படும். இதற்குக் காரணம் கண்ணுக்குத் தெரியாத ஒருவித நுண்ணுயிர்களே. மேலும் மன அழுத்தம், ஊட்டச் சத்துக் குறைபாடும் பொடுகு ஏற்பட காரணமாகும். எனவே ஆரோக்கியமான உணவு உட்கொண்டால் பொடுகை தவிர்க்கலாம் என்கின்றனர் அழகியல் நிபுணர்கள். மன அழுத்தம் இன்றி அமைதியை கடைபிடித்தால் பொடுகு வராமல் தவிர்க்கலாம் என்றும் நிபுணர்கள் கூறுகின்றனர். 

கூந்தல் உதிர்வதற்கான பல்வேறு காரணங்களுள் ஒன்று பொடுகு. சிலருக்கு பொடுகு காரணமாக அரிப்பு ஏற்படும். அரிப்பு நீங்கவும், பொடுகை போக்கவும் இயற்கையான வழிமுறைகளை தெரிவிக்கின்றனர் அழகியல் நிபுணர்கள்.

உஷ்ணம் நீக்கும் வெந்தயம்
வெந்தயத்தை தலைக்குதேய்த்து குளித்தால், உடல் உஷ்ணம் குறைந்து பொடுகுத் தொல்லை தீரும். மிளகுதூளுடன் பால் சேர்த்து தலையில்தேய்த்து சில நிமிடங்கள் ஊறியபின் குளித்தால், "பொடுகு தொல்லை நீங்கும்". தேங்காய் எண்ணெயில் வெந்தயத்தை சேர்த்து காய்ச்சி, தலையில் தேய்த்து வந்தால், பொடுகுபிரச்னை நீங்கும்.

பாசிப்பயறு, தயிர்
பாசிப்பயிறு மாவு மற்றும் தயிர் கலந்து தலையில் உறவைத்து பின்னர் குளித்தால் பொடுகு தொல்லை நீங்கும்.கற்றாழை சாற்றை தலையில் மேல் தோலில்தேய்த்து ஊறவைத்து சிறிது நேரம் கழித்துகுளித்தால் பொடுகு தொல்லை நீங்கும். தலையில் சிறிதளவு தயிர் தேய்த்து சில நிமிடங்கள் கழித்து ஷாம்பு அல்லது சீயக்காய் தேய்த்து குளித்தால் பொடுகு நீங்கும்.

வேப்பிலை, துளசி
பூச்சித்தாக்குதலினால் பொடுகு ஏற்படுவது இயற்கை. எனவே அந்த மாதிரி நேரங்களில் ரசாயன ஷாம்புகளை பயன்படுத்துவதை தவிர்த்து வேப்பிலை கொழுந்து துளசி ஆகியவற்றை மைய அரைத்து தலையில் தேய்த்து சிறிதுநேரம் கழித்து குளித்தால் பொடுகுதொல்லை நீங்கும். துளசி, கறிவேப்பிலையை அரைத்து எலுமிச்சம் பழச்சாற்றுடன் கலந்து தலையில் சிறிது நேரம் ஊறவைத்து கழித்து குளித்தால் பொடுகு பிரச்னை நீங்கும்.

வசம்பை நன்கு பவுடராக்கி, தேங்காய் எண்ணெயில் ஊறவைத்து, அந்த எண்ணெயை தலையில் தேய்த்து வந்தால் பொடுகு மறையும். எலுமிச்சம் பழச்சாற்றுடன், தேங்காய்எண்ணெய் கலந்து தலையில்தேய்த்து வந்தாலோ அல்லது எலுமிச்சம்பழச்சாறுடன், தயிர் மற்றும் பச்சைபயிறு மாவு கலந்து தலையில் தேய்த்து சில நிமிடங்கள் கழித்து ஷாம்புபோட்டு குளித்தாலும் பொடுகு நீங்கும்.தலைக்கு குளிக்கும்போது, கடைசியாக குளிக்கும் தண்ணீரில் சிறிதளவு வினிகர் சேர்த்து குளிக்கலாம்.

மருதாணி இலை தூள்
வாரம் ஒருமுறை, மருதாணி இலையை அரைத்து, சிறிதளவு தயிர் மற்றும் எலுமிச்சைசாறு கலந்து தலையில் தேய்த்தால், பொடுகுதொல்லை நீங்கும். நெல்லிக்காய் தூள், வெந்தயப்பொடி, தயிர் மற்றும் கடலைமாவு கலந்து தலையில் தேய்த்து, சிறிதுநேரம் கழித்து குளிக்கவேண்டும். இவ்வாறு வாரம் ஒருமுறை செய்துவர பொடுகு நீங்கும்.

தேங்காய் பால்
தேங்காயை அரைத்து பால் எடுத்து அதை தலையில் நன்றாக தேய்த்து, சிறிது நேரம் கழித்து மிதமான நீரில் தலையை அலசினால் பொடுகு மறைந்துவிடும். கூந்தல் பள பளக்கும்.

முதல்நாள் சாதம்வடித்த தண்ணீரை எடுத்துவைத்து, மறுநாள் அதை எடுத்து வைத்து தலையில் தேய்த்து குளிக்கலாம். முட்டை வெள்ளைக் கரு, தயிர், எலுமிச்சை சாறு கலந்து தலையில் தேய்த்துக் குளிக்க பொடுகுமறையும்.



அழகுக் குறிப்புகள் உடற்பயிற்சி
இனி உடற்பயிற்சிக் கூடங்களில் இருக்கும் சில முக்கியமான கருவிகளைப் பற்றித் தெரிந்து கொள்வோம்.
அப்டமன் பென்ச் : சரிவான பகுதியைத் தலைப்புறம் வைத்துக் கொண்டு கால்புறம் சற்று மேடாக இருக்கும்படி மல்லாந்து படுத்துக் கொள்ள வேண்டும். படுத்துக் கொண்டே தலைக்குப் பின்புறம் கைகளை வைத்துக் கொண்டு, மூச்சை வெளியே விட்டுக்கொண்டே முழங்கால்களைத் தொட வேண்டும். இம்மாதிரி 5 தடவை, 10 தடவை என்று படிப்படியாக அதிகரித்து முடிவில் 100 தடவைகளாவது செய்ய வேண்டும். இதனால் வயிறு, இடுப்பு ஆகிய பகுதிகளில் உள்ள அதிகப்படியான சதைகள் குறைந்து இளமையாகத் தோன்றலாம்.

டுவிஸ்டர் உட்கார்ந்தும் நின்றும், இடுப்பை வளைத்தும், குறைந்தது 50 முதல் 500 தடவை வரை பயிற்சி செய்யலாம். அவ்வாறு செய்தால் இடுப்பு மடிப்பு நீங்கும்; இடுப்புக்கு நல்ல வடிவமும் கிடைக்கும்.

ரோயிங் இருக்கையில் உட்கார்ந்து கொண்டு, கால்கள் இரண்டையும் பெடலில் வைத்துக் கொண்டு, பக்கவாட்டில் இருக்கும் இரு ஹேண்டில்களை கைகளால் பிடித்துக் கொண்டு இருக்கையை நகர்த்தியபடியே முன்னும் பின்னும் கைகளால் துடுப்புத் தள்ளுவது போன்று, 25 முதல் 200 தடவை செய்ய வேண்டும். பெண்கள் குறைவாகச் செய்ய வேண்டும். இதன் மூலம் தொடைகள், கால்களில் உள்ள கொழுப்பு ஆகியன குறைந்து தோளுக்கும் நல்ல வடிவம் அமைகிறது.

சைக்கிள் உடற்பயிற்சிக்கு என்றே வடிவமைக்கப்பட்ட இந்த சைக்கிளில், ஒவ்வொருவரும், அவரவர் விருப்பத்திற்கு ஏற்ப, 5 நிமிடம் முதல் அரைமணி நேரம் வரை பயிற்சி செய்யலாம். இது கால்களுக்குத் தனி அழகைத் கொடுக்கும். இதில் இருக்கும் மீட்டர் மூலம், ஒரு நாளைக்கு எத்தனை கிலோ மீட்டர் பயிற்சி செய்கிறோம் என்று குறித்துக் கொள்ளலாம்.

வைப்ரேட்டர் மின்சாரத்தால் இயக்கப்படும் இந்த மெஷினின் பெல்ட்டை அதிகப்படியான சதைகள் இருக்கும் பகுதிகளில் எல்லாம் ஒரு நிமிடம் வீதம் 5 நிமிடங்கள் பயிற்சி செய்யலாம். கர்ப்பப்பை தொந்தரவு இருப்பவர்கள் இதைச் செய்ய வேண்டாம். இது, உடல் உறுப்புகளுக்கு மசாஜ் செய்வதுபோல் இருக்கும்.

வாக்கர் (Walker) : வாக்கர் எனப்படும் ‘டிரட்மில்’லை மருத்துவ மனைகளில் பார்த்திருக்கலாம். இது நின்ற இடத்திலேயே ஜாகிங் செய்வது போன்று, ரோல்களால் இயக்கப்படும் ஓர் இயந்திரம். இதில் 10 நிமிடம் ஓடுவது, வெளியில் 5 கிலோமீட்டர் ஓடுவதற்கு ஒப்பாகும். இதன் மூலம் உடல் முழுவதுமுள்ள அதிகப்படியான சதைகள் குறைந்து இரத்த ஓட்டம் அதிகரிக்கிறது.

ஸ்டெப்பர் இருபுறமும் கால் வைக்க இரு பெடல்கள் இருக்கும். கைகை ஹேண்டில் பாரில் பிடித்துக் கொண்டு, கால்களால் பெடல் செய்யும்போது கால்களில் உள்ள அதிகப்படியான சதைகள் குறைக்கப்பட்டு, கைகளும், தோள்களும் பலம் பெறுகின்றன.
உடற்பயிற்சிக் கூடங்களுக்குச் செல்லுமுன் உங்கள் குடும்ப மருத்துவரை ஆலோசித்துவிட்டுச் செல்லவும். தகுந்த பயிற்சியாளரிடம் பயிற்சி பெறுவது நல்லது. அழகுக்கூடும்…

No comments




வரலாற்று தகவல்கள்
அறிவியல் தகவல்கள்
ஆன்மிகம்
பொது அறிவு
மகளிர் ஸ்பெஷல்