Page Nav

HIDE

Grid

GRID_STYLE

Hover Effects

TRUE
{fbt_classic_header}

Latest News:

latest

Ads Place

சமையல் குறிப்புகள்

பட்டர் பீன்ஸ் பொரியல்  பட்டர் பீன்ஸ் பொரியல் தேவையான பொருட்கள் : பட்டர் பீன்ஸ் பயறு - 1/4 கிலோ தேங்காய் - 1 பத்தை சக்தி குழம்பு மசாலா பொடி -...

பட்டர் பீன்ஸ் பொரியல் பட்டர் பீன்ஸ் பொரியல்

தேவையான பொருட்கள் :
பட்டர் பீன்ஸ் பயறு - 1/4 கிலோ
தேங்காய் - 1 பத்தை
சக்தி குழம்பு மசாலா பொடி - 2 ஸ்பூன்
பல்லாரி வெங்காயம் - பாதி நறுக்கியது
மிளகாய் - 1
தக்காளி - 1 
கடுகு, எண்ணெய், கறிவேப்பிலை, கொத்தமல்லி, உப்பு - சிறிதளவு

செய்முறை :

1. பட்டர் பீன்ஸ் பயறை 10 நிமிடம் அவித்துக் கொள்ளவும்.

2.  தேங்காயை மிக்ஸியில் விழுதாக அரைத்துக் கொள்ளவும்.

3. வாணலியில் எண்ணெய் ஊற்றி தக்காளி, கடுகு, கறிவேப்பிலை, வெங்காயம் சேர்த்து தாளித்துக் கொள்ளவும்.

4. அதனுடன் அவித்த பட்டர்பீன்ஸையும், மசாலா பொடியையும், அரைத்த தேங்காயையும் சேர்த்து வேகவிடவும்.

5. தேவையான அளவு உப்பு சேர்த்துக் கொள்ளவும். அவ்வப்போது கிண்டி விடவும்.

6. 10 நிமிடம் கழித்து பொரியல் தயார். இறுதியில் மல்லி சேர்த்துப் பரிமாறவும்.



செட்டிநாடு சிக்கன் பிரியாணி
செட்டிநாடு முறையில் சுவையான சிக்கன் பிரியாணி செய்வதற்கான எளிய குறிப்பு. இந்த குறிப்பு திரு.தாமோதரன்(செப்.தாமு) அவர்களின் சமையல் குறிப்பைத் தழுவியது.
தேவையான பொருட்கள்
  • அரிசி – 1 /2 கிலோ
  • சிக்கன்(எலும்புடன்) – 1 /2 கிலோ
  • கொத்தமல்லி – 1 /2 கட்டு
  • புதினா – 1  கட்டு
  • பச்சை மிளகாய் – 4
  • வெங்காயம் – 250  கிராம்
  • தக்காளி – 250  கிராம்
  • இஞ்சி, பூண்டு விழுது – 50  கிராம்
  • தயிர் – 1 /2 ஆழாக்கு
  • எண்ணெய் – 1  குழிக்கரண்டி
  • ஏலக்காய் – 2
  • கடற்பாசி – 1 /2  தேக்கரண்டி
  • பட்டை, லவங்கம், மராட்டி மொக்கு, அன்னாசிப்பூ – தலா 2
  • மிளகாய்த்தூள் – 2  தேக்கரண்டி
  • மஞ்சள்தூள் – 1 /2 தேக்கரண்டி
  • தனியாத்தூள் – 4  தேக்கரண்டி
  • உப்பு – தேவையான அளவு
செய்முறை
  1. ஒரு அடி கனமான அகலமான பாத்திரம் அல்லது குக்கரை அடுப்பில் வைத்து ஒரு குழிக்கரண்டி எண்ணெய் விட்டு மேலே கொடுக்கப்பட்டுள்ள கரம் மசாலா பொருட்களை(பட்டை, லவங்கம், மராட்டி மொக்கு, அன்னாசிப்பூ,ஏலக்காய்,கடற்பாசி) சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ளவும். வேண்டுமெனில் இந்த மசாலாப் பொருட்களை பொடி செய்தும் உபயோகிக்கலாம்.
  2. பின்னர் பொடியாக நறுக்கி வைத்துள்ள வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். வெங்காயம் நன்கு வதங்கியவுடன் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போக நன்கு வதக்கிக் கொள்ளவும். பின் தக்காளி சேர்த்து நன்கு மசியுமாறு வதக்கிக் கொள்ளவும்.
  3. பின் மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், தனியாத்தூள் சேர்த்து சிறிது தண்ணீர் தெளித்து, பச்சை வாசனை போகுமளவு நன்கு கிளறவும். பின்னர் கொத்தமல்லி, புதினா சேர்த்து வதக்கவும்.
  4. பிறகு நன்கு சுத்தம் செய்து வைத்துள்ள சிக்கன் சேர்த்து நன்றாக அதன் நிறம் மாறும் வரை கிளறவும். இதனுடன் சிறிது தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து வேக விடவும்.
  5. சிக்கன் பாதியளவு வெந்த பிறகு, பச்சைமிளகாயைச் சேர்க்கவும். திக்கான மசாலா கலவையுடன் சிக்கன் இருக்கும் போது, கழுவி வைத்துள்ள அரசியைச் சேர்த்து கலக்கவும்.
  6. ஒரு கப் அரிசிக்கு 1 1 /2 கப் தண்ணீர் சேர்த்து மூடி விடவும்.முக்கால் பதம் வெந்த நிலையில், மூடியத் திறந்து தயிரைச் சேர்த்து கிளறவும்.
  7. தோசைக்கல்லை அடுப்பில் வைத்து தண்ணீர் விட்டு முக்கால் பதம் வெந்த நிலையில் உள்ள பிரியாணியை பாத்திரத்துடன் அதன் மீது வைத்து நன்கு மூடி விடவும். அந்த மூடியின் மேல் தண்ணீருடன் உள்ள பாத்திரத்தை வைக்கவும்.
  8. பத்து நிமிடம் கழித்து மூடியத் திறந்து புதினா, கொத்தமல்லித்தழைகளை அதன் மேல் தூவி பரிமாறவும்.
  9. பரிமாறும் போது பொன்னிறமாக வதக்கி வைத்துள்ள வெங்காயத்தை மேலே தூவி பரிமாறவும்.
குறிப்பு
  1. சிக்கனைச் சிறிது சிறிதாக கோடு போட்டோ, அல்லது கீறியோ விட்டு செய்தால் மசாலா நன்கு உட்புறம் சார்ந்து சுவையாக இருக்கும்.
  2. தம்மில் போடும்போது தோசைக்கல்லில் தண்ணீர் ஆவியாகிவிட்டால் தண்ணீர் சேர்க்கவும், இல்லையென்றால் பாத்திரம் அடிப்பிடித்து விடும்.


கடாய் கேப்சிகம் சிக்கன் ஃபிரை

தேவையான பொருட்கள் :
சிக்கன்-அரைக் கிலோ 
குடமிளகாய்-இரண்டு
வெங்காயம்-ஒன்று
தக்காளி-ஒன்று
மிளகு-ஒரு தேக்கரண்டி
சீரகம்-ஒரு தேக்கரண்டி
இஞ்சி பூண்டு விழுது-2தேக்கரண்டி 
மஞ்சததூ ள்-அரைத் தேக்கரண்டி
மிளகாய்த்தூள்-ஒரு தேக்கரண்டி
பட்டை லவங்கம் ஏலக்காய் தலா-இரண்டு
உப்பு-தேவைகேற்ப
எண்ணெய்-அரைக் குழிக்கரண்டி.
செய்முறை :
  1. சிக்கனை சிறிய துண்டுகளாக நறுக்கவும்,
  2. குடமிளகாயை மெல்லியத்துண்டுகளாக நறுக்கவும்,
  3. தக்காளி வெங்காயத்தை பொடியாக நறுக்கவும்,
  4. மிளகு சீரகத்தை பொடித்து தனியே வைக்கவும்,
  5. கடாயில் எண்ணெயைக் காயவைத்து வாசனைப் பொருட்களைப் போடவும்,
  6. பின்பு வெங்காயத்தைப் போட்டு நன்கு வதக்கவும்,
  7. அதன் பின்பு இஞ்சி பூண்டு விழுதைப் போட்டு வதக்கி தக்காளியைப் போடவும்,
  8. தக்காளி வதங்கியதும் சிக்கன் துண்டுகளைப் போட்டு அதனுடன் உப்பு,
  9. மஞ்சத்தூள்,மிளகாய்த்தூளைப் போட்டு நன்கு வதக்கவும், பின்பு குடமிளகாயைச் சேர்த்து நன்கு கிளறி,சிறிது நீரைத் தெளித்து மூடிப் போட்டு வேகவிடவும்,
  10. சிக்கன் நன்கு வெந்தப் பின்பு மிளகுசீரகப் பொடியைத் தூவி சுருள கிளறி இறக்கி வைக்கவும்.


வாழைப்பூ வடை

வாழைப்பூ எண்ணற்ற சத்துக்களை கொண்டுள்ளது. இதில் அதிகஅளவு நார்ச்சத்தும், நன்மை தரும் கொழுப்பு அமிலங்களும் உள் ளன. புரதச் சத்து நிறைந்த வழைப்பூவில் வைட்டமின் இ மற்றும் ப்ளேவனாய்டுகளும் காணப்படுகின்றன. அதனை எப்படி சமைத்துச் சாப்பிட்டா லும் மருத்துவ குணம் மாறு வதில்லை. எனவே கடலைப் பருப்புடன் சேர்த்து வடை செய்து சாப்பிடுவதன் மூலம் சத்துக்கள் அப்படியே கிடைக்கும்.
தேவையானப்பொருட்கள்:
வாழைப்பூ – 1
கடலைப்பருப்பு – 1 கப்
காய்ந்தமிளகாய் – 2
பெருங்காயத்தூள் – ஒரு சிட்டிகை
சோம்பு – 1 டீஸ்பூன்
இஞ்சி – ஒரு சிறு துண்டு
வெங்காயம் – 1
பச்சை மிளகாய் – 2
கறிவேப்பிலை – சிறிது
உப்பு – தேவைக்கேற்றவாறு
எண்ணை – பொரிப்பதற்கு ஏற்ப எடுத் துக்கொள்ளவும்.
வடை செய்முறை:
கடலைப்பருப்பை, தனியாக எடுத்து மூன்று மணி நேரம் ஊற வை த்துக் கொள்ளவும்.
வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை ஆகியவற் றைப் பொடியாக நறுக்கிக் கொ ள்ளவும்.
வாழைப்பூவை, நறுக்கித் தண் ணீரில் போட்டு வைக்கவும். பின்னர் அந்த பூவை தண்ணீ ரிலிருந்து எடுத்து, ஒரு பாத்தி ரத்தில் போட்டு அது மூழ்கும் அளவிற்கு, வேறு சுத்தமான தண்ணீரை ஊற்றி, அடுப்பில் வைத்து ஒரிரு நிமிடங்கள் நன்றாக கொதிக்க விட்டு கீழே இறக்கி, நீரை ஒட்ட வடித்து விட்டு ஆறவிட வும். பின்னர் நன்றாக பிழிந்தெடுத்து, தனியாக வைத்துக் கொள் ளவும்.
ஊறவைத்துள்ள பருப்பை, நன்றாக அல சி, நீரை வடித்துவிட்டு, அத்துடன் காய்ந் த மிளகாய், இஞ்சி, சோம்பு, பெருங்காய ம், உப்பு சேர்த்து கரகரப்பாக அரைத்துக் கொள்ளவும். பருப்பை வழித்தெ டுக்கும் முன்னர், வேகவைத்த வாழைப்பூ வைப் போட்டு ஓரிரு சுற்றுகள் சுற்றி எடுத்துக் கொள்ளவும். அத்துடன் நறுக்கி வைத்து ள்ள வெங்காயம், பச்சை மிளகாய், கறி வேப்பிலை ஆகியவற் றைச் சேர்த்து நன்றாகப் பிசைந்துக் கொள்ளவும்.
எண்ணையைக் காயவைத்து, மாவை வடையாகத் தட்டிப் போட்டு, பொன்னிறமாகும் வரை வேகவிட்டு எடுக்கவும். சூடான சத்தான வாழைப்பூ வடை தயார். மாலை நேரத்தில் தேங்காய் சட்னியோடு சாப்பிட சுவையாக இருக்கும்.


பால் அல்வா
தேவையான பொருள்கள்:

காய்ச்சிய பால் - 5 கப்
அஸ்கா சர்க்கரை - 1/4 கப்
எலுமிச்சம்பழச் சாறு - 1/2 ஸ்பூன்
உருக்கிய நெய் - 1/4 கப்
சாரப்பருப்பு - 1 ஸ்பூன்
ஏலப்பொடி - 1/2 ஸ்பூன்
பன்னீர் - 1 ஸ்பூன்
கிஸ்மிஸ் பழம் - 6

செய்முறை:

* கனமான பாத்திரத்தில் பாலை ஊற்றி அடுப்பில் வைத்துச் சூடானவுடன், எலுமிச்சம் பழச்சாறு ஊற்றிக் கைவிடாமல் கிளறி தயிர் பதம் வந்தவுடன், விட்டு விட்டுக் கிறளவும்.

* பாலின் அளவு நான்கில் ஒரு பங்கு ஆனவுடன், அதில் சர்க்கரையைக் கொட்டி மீண்டும் கிளறவும்.

* பிறகு நெய்யை ஊற்றி, பாத்திரத்தின் மேல் பாகத்தில் ஒட்டியிருக்கும் பாலாடையையும் வழித்து பாலுக்குள்ளேயே போட்டு, சிறிதளவு கெட்டியாகி திரட்டுப் பால் பதம் வந்தவுடன், பன்னீரைத் தெளித்துப் பாத்திரத்தை அடுப்பிலிருந்து இறக்கி, சாரப்பருப்பு போட்டுக் கிளறிவிடவும்.

* சூடாகப் பரிமாறவும். ஃபிரிட்ஜில் வைத்து தேவைப்படும் போது எடுத்தும் பரிமாறலாம்.


கத்திரி | முருங்கை குழம்பு
தேவையானவை: கத்திரிக்காய் – 100 கிராம், சிறிய முருங்கை க்காய், வெங்காயம், தக்காளி – தலா 1, பூண்டு – 2 பல், மிளகு – அரை டீஸ்பூன், துவரம்பருப்பு – ஒரு டீஸ்பூன், மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன்,மிளகாய்த்தூள் – 2 டீஸ்பூன், தனியாத்தூள், வறுத்து பொடித்த சீரகம், கடுகு, உளுத்தம்பருப்பு – தலா ஒரு டீஸ்பூன், கறிவேப் பிலை – சிறிதளவு, புளி – நெல்லி க்காய் அளவு, எண்ணெய், உப்பு – தேவை யான அளவு.
செய்முறை: கத்திரிக்காய், முருங் கைக்காய், தக்காளி, வெங் காய த்தை நறுக்கிக் கொள் ளவும். அடுப்பில் கடாயை வைத்து, காய்ந்ததும் எண்ணெய் விட்டு… கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப் பிலை, துவரம்பருப்பு போட்டு தாளித்து, பொடியாக நறுக்கிய வெங்காயம், பூண்டு, மிளகு சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். இதில் முருங்கைக்காய் சேர்த்து வதக்கி, கத்திரிக்காய், தக்காளி, உப்பு, மஞ்சள்தூள், மிளகாய்தூள், தனியாத் தூள் போட்டு சிறிது நேரம் வதக்கவும். புளியைக் கரைத்து ஊற்றி, காய் வேகும் அளவுக்கு தண்ணீர் விட்டு மூடி வைக்கவும். தீயைக் குறைத்து, சீரகத்தூளை சேர்த்து, எண்ணெய் பிரிந்து வந்ததும் இறக்கவும்.


Creamy Potato Leek Soup
தேவையான பொருட்கள்:
8 உருளைக்கிழங்கு, தோல் சீவி சதுர துண்டுகளாக வெட்டியது.
4 கப் சிக்கன் புறொத் (Chicken Broth)
1/2 கிலோ பேக்கன் சிறு துண்டுகளாக வெட்டியது
3 லீக்ஸ் நறுக்கியது
1 கப் தடித்த கிறீம் (heavy cream)
செய்முறை:
பாத்திரத்தை அளவான வெப்பத்தில் வைத்து அதில் Chicken Brothஐயும் உருளைக்கிழங்கையும் கொதிக்க வைக்கவும். உருளைக் கிழங்கு அவிந்து மென்மையாக வரும்வரை (கவனிக்கவும் – பின்பு மாஷ் பண்ண வேண்டியிருக்கும்) வெப்பத்திலேயே விடவும்.
அவ்வேளையில் இன்னொரு பாத்திரத்தை சூடாக்கி, அதில் பேக்கன் துண்டுகளைப் போட்டு பொரிய விடவும். பிறவுண் கலராக மாறும் வரை விட்டு பேக்கனை வடித்து எடுக்கவும். பேக்கன் பொரிந்து வந்த எண்ணெய்யில் 3 மே.க அளவு வைத்துக் கொண்டு மீதியை ஊற்றவும்.
அதே பாத்திரத்தில் லீக்ஸ்சை போட்டு எடுத்து வைத்த பேக்கன் பொரிந்து வந்த எண்ணெய்யையும் விட்டு, 8 இலிருந்து -10 நிமிடங்கள் பொரியவிட்டு இறக்கவும்.
உருளைக்கிழங்கு அவிந்ததும், அதை மசித்து (மாஷ் பண்ணி) அதில் லீக்ஸ், பேக்கன், கிறீம் என்பவற்றை போட்டு கலக்கி சூடாக பரிமாறவும்.
இது கொஞ்சம் ஹெவியான சூப் என்பதால், லைட் மீல்சுக்கு முன் பரிமாற உகந்தது.


சமையல் குறிப்பு – நெத்திலி மீன் குழம்பு


நெத்திலிக் குழம்பை நேசிக் காத அசைவப் பிரியர்களே இரு க்க முடியாது. எளிதாக சமை த்து ருசியாகச் சாப்பிட ஏற்றது நெத்திலி மீன். சமைச்சு சாப் பிட்டு பாருங்க.. சும்மா கும்மு ன்னு இருக்கும். என்னங்க எங்க கௌம்பிட்டீங்க… நெத்திலி குழம்பு வைக்கதானே……
தேவையான பொருட்கள்:

நெத்திலி மீன் – 1/4 கிலோ

சின்ன வெங்காயம் – ஒரு கை அளவு
தக்காளி – 3
மஞ்சள் தூள் – 1/2 டீ ஸ்பூன்
மிளகாய்த் தூள் – 2 டீ ஸ்பூன்
தனியா தூள் – 3 டீ ஸ்பூன்
புளி – ஒரு எலுமிச்சை அளவு
எண்ணை – ஒரு குழிக்கரண்டி
கடுகு – ஒரு டீ ஸ்பூன்
காய்ந்த மிளகாய் – 2
கறிவேப்பிலை – ஒரு கொத்து
வெந்தயம் – ஒரு டீ ஸ்பூன்
உப்பு – தேவைக்கேற்ப
செய்முறை:
* நெத்திலியை சுத்தம் செஞ்சுக்குங்க. எண்ணை ய்விட்டு கடுகு, கறிவேப்பிலை, வெந்தயம் ஆகிய வற்றை தாளிக்கவும்.
* வெங்காயத்தை பொன் முறுவலா வதக்கிட்டு, தக்காளியையும் போ ட்டு வதக்கணும்.
* பிறகு புளியைத் தேவையான அளவு தண்ணியில் கரைச்சு ஊத்தி, உப்பு போடுங்க.
* குழம்பு நல்லாக் கொதிக்கிறப்போ, கழுவி வச்ச நெத்திலி மீன்க ளைப் போட்டு, மீன்ல குழம்பு சேர்ந்ததும் இறக்கிடுங்க.
* காலைல வச்ச குழம்பை ராத்திரி சாப்பாட்டுக்கு சாப்பிட்டுப் பாரு ங்க. உலகத்தையே எழுதித் தருவீங்க.


பெப்பர் சிக்கன் ரோஸ்ட்

தேவையான பொருட்கள் :
கோழி-ஒன்று 1kg
இஞ்சி பூண்டு பேஸ்ட்-இரண்டு தேக்கரண்டி
மிளகு-இரண்டு தேக்கரண்டி
மஞ்சத்தூள்-அரைத் தேக்கரண்டி
பச்சை மிளகாய்-நான்கு
வெங்காயம்-இரண்டு
கறிவேப்பிலை-இரண்டு கொத்து
எலுமிச்சை சாறு-இரண்டு தேக்கரண்டி
உப்பு-தேவைகேற்ப
எண்ணெய்-ஒரு குழிக்கரண்டி
செய்முறை :
மிளகை கரகரப்பாக பொடிக்கவும், வெங்காயம் பச்சைமிளகாயை பொடியாக நறுக்கவும்,
கோழியை பெரிய துண்டுகளாக நறுக்கி அதில் இஞ்சி பூண்டு மஞ்சத்தூள், பொடித்த மிளகு, உப்பு, கறிவேப்பிலை ஆகியவற்றைச் சேர்த்து ந்ன்கு கலந்து ஒரு மணி நேரம் ஊற வைக்கவும்,
பின்பு கடாயில் எண்ணெயை காயவைத்து அதில் வெங்காயம் பச்சைமிளகாயைப் போட்டு சிவக்க வதக்கி பின்பு ஊறிய சிக்கன் துண்டுகளை போட்டு வதக்கவும்,  அடுப்பை நிதானமாக எரியவிட்டு கோழி வேகும் வரை சமைத்து எலுமிச்சைசாறை
தெளித்து நன்கு கிள்றி இறக்கவும்,
சுவையான பெப்பர் சிக்கன் ரோஸ்ட் தயார்.

No comments




வரலாற்று தகவல்கள்
அறிவியல் தகவல்கள்
ஆன்மிகம்
பொது அறிவு
மகளிர் ஸ்பெஷல்