குளச்சல்,மணவாளக்குறிச்சி பகுதிகளில் மின்தடை அறிவிப்பு செம்பொன்விளை, சேரமங்கலம், முட்டம் துணை மின்நிலையங்களில் பராமரிப்பு பணிகள் ...
குளச்சல்,மணவாளக்குறிச்சி பகுதிகளில் மின்தடை அறிவிப்பு

செம்பொன்விளை, சேரமங்கலம், முட்டம் துணை மின்நிலையங்களில் பராமரிப்பு பணிகள் அக்டோபர் 31-ம் தேதி வெள்ளிக்கிழமை நடக்கிறது.
அன்று காலை 8 மணி முதல் பகல் 2 மணி வரை செம்பொன்விளை, திக்கணங்கோடு, மத்திகோடு, சேனம்விளை,குளச்சல், கொட்டில்பாடு, தலக்குளம், சேரமங்கலம், அழகன்பாறை, இரணியல், மணவாளக்குறிச்சி, வெள்ளமோடி, வெள்ளிச்சந்தை, முட்டம், கட்டிமாங்கோடு ஆகிய இடங்களுக்கும், துணை கிராமங்களுக்கும் மின் வினியோகம் இருக்காது.
மேலும் அதே நாளில் கருங்கல் துணை மின் நிலையம் மாதந்திர பாரமரிப்பு பணி அக்டோபர் 31 வெள்ளி நடக்கிறது. காலை 8.00 மணி முதல் மாலை 3.00 மணி வரை மின்விநியோகம் இருக்காது. பொதுமக்கள் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். மரக்கிளைகள் வெட்டி அகற்றப்படும். குழித்துறை மின்விநியோக செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.
















No comments