கன்னியாகுமரி மாவட்டத்தில் 3 நாட்கள் உள்ளூர் விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, வரும் பிப்ரவரி 26ம் தேதி (புதன்கிழமை) மகா சிவராத்...
கன்னியாகுமரி மாவட்டத்தில் 3 நாட்கள் உள்ளூர் விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, வரும் பிப்ரவரி 26ம் தேதி (புதன்கிழமை) மகா சிவராத்திரியை ஒட்டி கன்னியாகுமரியில் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல அய்யா வைகுண்டரின் அவதார தினத்தை முன்னிட்டு வரும் மார்ச் 4-ம் தேதி (செவ்வாய்கிழமை) மற்றும் மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் 10 வது நாள் திருவிழாவையொட்டி வரும் மார்ச் 11-ம் தேதி (செவ்வாய்கிழமை) அன்றும் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, அத்தியாவசிய பணிகள் / பணியாளர்களுக்கு இவ்விடுமுறை பொருந்தாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது என்று மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.
No comments