Page Nav

HIDE

Grid

GRID_STYLE

Hover Effects

TRUE
{fbt_classic_header}

Latest News:

latest

Ads Place

நாகர்கோவில் மணிக்கூண்டு (Tower Clock)

மணிக்கூண்டு (Tower Clock) நாகர்கோவில் நகரின் முக்கிய அடையாளமாக திகழும் மணிமேடை 117 ஆண்டுகள் பழமையானதாகும். 1892-ம் ஆண்டு ஜூலை மாதம் ப...

மணிக்கூண்டு
(Tower Clock)
நாகர்கோவில் நகரின் முக்கிய அடையாளமாக திகழும் மணிமேடை 117 ஆண்டுகள் பழமையானதாகும். 1892-ம் ஆண்டு ஜூலை மாதம் பணி துவங்கி ஆகஸ்ட் மாதத்தில் கட்டி முடிக்கப்பட்டது. லண்டன் திருச்சபையை சார்ந்த மறை திரு. டத்தி ஹூவெர்ப் ஹோர்ஸ்லி மற்றும் நாகர்கோவிலை சார்ந்த கிருஷ்ணர் ஐயர், ரத்தினசாமி ஐயர் ஆகியோர் இணைந்து இதனை கட்டினர்.
1893-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் திருவாங்கூர் மன்னர் ஸ்ரீமூலம் திருநாள் ராமவர்மா அவர்களால் திறக்கப்பட்டது. இதற்கான செலவு ரூ. 3258, 9 சக்கரம், 12 காசுகள் ஆகும். (1 சக்கரம் என்பது 16 காசுகளாகும். 28 சக்கரம் 1 ரூபாயாகும்). இதில் பொருத்தப்பட்டுள்ள கடிகாரம் லண்டனில் 20 ஆண்டுகள் பயன்படுத்தப்பட்டு, நாகர்கோவில் இங்கிலீஷ் மிஷினரிக்கு அன்பளிப்பாக வந்ததை திருவிதாங்கூர் மன்னர் ஸ்ரீமூலம் திருநாள் ரவிவர்மா வாங்கி நிறுவினார்.

இந்த மணி மேடையில் 1972-ம் ஆண்டு கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனின் திருவுருவ சிலை நிறுவப்பட்டது. இத்தைய சிறப்பு வாய்ந்த மணிக்கூண்டும், நாகர்கோவில் நாகராஜா கோவில் நுழைவாயிலில் அமைந்துள்ள மகாமேரு மாளிகையும் நாகக்ரோவிலில் நகராட்சியின் அதிகார முத்திரையாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.

No comments




வரலாற்று தகவல்கள்
அறிவியல் தகவல்கள்
ஆன்மிகம்
பொது அறிவு
மகளிர் ஸ்பெஷல்