கன்னியாகுமரி மாவட்டத்தில் மிகவும் பிரசித்திபெற்ற மண்டைக்காடு பகவதியம்மன் கோவில் திருவிழா மார்ச் 3-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) கொடியேற்றத்துடன்...
கன்னியாகுமரி மாவட்டத்தில் மிகவும் பிரசித்திபெற்ற மண்டைக்காடு பகவதியம்மன் கோவில் திருவிழா மார்ச் 3-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) கொடியேற்றத்துடன் துவங்கி 10 நாள்கள் நடைபெறுகிறது.
முதல் நாள் காலை 4.30 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு, 5 மணிக்கு கணபதி ஹோமமும், 6.30 மணிக்கு உஷ பூஜையும், 7.30 முதல் 8.30 மணி வரை திருக்கொடி ஏற்ற நிகழ்வு நடைபெறுகிறது.
தொடர்ந்து சமய மாநாட்டு திடலில் ஹைந்தவ சேவா சங்கம் சார்பில் 87-வது சமய மாநாட்டு கொடியேற்றம் நடக்கிறது. இதில் தெலுங்கானா மற்றும் புதுச்சேரி கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன், தமிழக அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு மற்றும் ஆன்மிக பெரியவர்கள் பலர் கலந்து கொள்கின்றனர்.
விழா நாள்களில் தினமும் அதிகாலை 5 மணிக்கு கணபதி ஹோமம், உஷ பூஜை, காலை 9.30 மணி மற்றும் இரவு 9.30 மணிக்கு அம்மன் வெள்ளி பல்லக்கில் எழுந்தருள் நிகழ்வு, மதியம் 1 மணிக்கு உச்சிகால பூஜை, மாலை 6 மணிக்கு தங்கதேர் உலா, 6.30 மணிக்கு சாயாட்சை பூஜை, இரவு 9 மணிக்கு அத்தாழ பூஜை ஆகியவை நடக்கிறது.
மார்ச் 8-ம் தேதி நள்ளிரவு 12 மணிக்கு முக்கிய நிகழ்வான வலிய படுக்கை பூஜை நடக்கிறது. 11-ம் தேதி இரவு 9.30 மணிக்கு சிறப்பு நாதஸ்வரம், நையாண்டி மேளத்துடன் பெரிய சக்கர தீவட்டியுடன் அம்மன் அலங்கார வீதி உலா நடக்கிறது.
சமய மாநாட்டு திடலில் ஹைந்தவ சேவா சங்கம் சார்பில் தினமும் ஆன்மிக நிகழ்வுகள், பக்தி பஜனை, ஸ்ரீமத் பாகவத மாஹாத்மிய பாராயணமும், விளக்கவுரையும், மஹாபாரத தொடர் விளக்கவுரையும் நடக்கிறது.
No comments