Page Nav

HIDE

Grid

GRID_STYLE

Hover Effects

TRUE
{fbt_classic_header}

Latest News:

latest

Ads Place

மணவாளக்குறிச்சி பகுதியை சேர்ந்தவர்களுக்கு ரூ.10 கோடி ஜாக்பாட்: கேரள பம்பர் லாட்டரியில் பரிசு மழை

கேரள மாநிலத்தில் அரசு சார்பில் லாட்டரி சீட்டு விற்பனை நடைபெற்று வருகிறது. மலையாள புத்தாண்டு தினமான விஷு தினத்தைக் கடந்த மாதம் லாட்டரி முன்னி...

கேரள மாநிலத்தில் அரசு சார்பில் லாட்டரி சீட்டு விற்பனை நடைபெற்று வருகிறது.
மலையாள புத்தாண்டு தினமான விஷு தினத்தைக் கடந்த மாதம் லாட்டரி முன்னிட்டு முதல் பம்பர் பரிசாக 10 கோடி ரூபாய் அறிவிக்கப்பட்ட லாட்டரி டிக்கெட் கடந்த மாதம் விற்பனைக்கு வந்தது. இதில், ஹெச்பி 727990 (HB 727990) என்ற எண் கொண்ட லாட்டரி சீட்டுக்கு 10 கோடி ரூபாய் பம்பர் பரிசு விழுந்துள்ளது.
அந்த சீட்டு வாங்கியது யார் எனத் தெரியவில்லை. ஒருவாரமாக அதிர்ஷ்டசாலி யார் என தெரியாமல் இருந்தது. இந்நிலையில், தமிழகத்தின் கன்னியாகுமரியை சேர்ந்தவர்தான் பம்பர் பரிசு அடித்த லாட்டரி சீட்டு வாங்கியது தெரியவந்துள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் மணவாளக்குறிச்சி பாபுஜி தெருவை சேர்ந்தவர் டாக்டர் பிரதீப்குமார் (வயது 50). இவர் முட்டம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் வட்டார மருத்துவ அலுவலராக உள்ளார். இவரது மனைவி டாக்டர் லேகா வி.நம்பியார் (45). இவர் மணவாளக்குறிச்சியில் மருத்துவமனை நடத்தி வருகிறார்.
கடந்த 15 ம் தேதி டாக்டர் பிரதீப்குமார் வெளிநாட்டிலிருந்து ஊருக்கு திரும்பி வந்த உறவினர் ஒருவரை அழைத்து வர திருவனந்தபுரம் விமான நிலையம் சென்றார். உடன் மைத்துனர் ரமேஷ் (64) என்பவரும் சென்றார். இருவரும் சேர்ந்து வாங்கிய கேரள விசு பம்பர் லாட்டரி சீட்டு எண் எச்.பி.727990 க்கு முதல் பரிசான ₹.10 கோடி விழுந்தது.
கடந்த 22 ம் தேதி குலுக்கல் நடந்த இந்த பரிசு சீட்டின் அதிர்ஷ்டசாலி யார்? என்பது தெரியாமல் இருந்தது. லாட்டரி ஏஜெண்டு மற்றும் லாட்டரி துறை அதிகாரிகள் இந்த அதிர்ஷ்டசாலியை கடந்த 10 நாட்களாக தேடி வந்தனர். இந்நிலையில் டாக்டர் பிரதீப்குமார் மற்றும் உறவினர் ரமேஷ் திருவனந்தபுரம் சென்று கேரள மாநில லாட்டரி துறை இயக்குனர் அலுவலகத்தில் அதிர்ஷ்ட சீட்டை ஒப்படைத்தனர்.

1 comment




வரலாற்று தகவல்கள்
அறிவியல் தகவல்கள்
ஆன்மிகம்
பொது அறிவு
மகளிர் ஸ்பெஷல்