மணவாளக்குறிச்சி, பள்ளித்தெருவில் வசித்து வந்த வி.எம்.பாவா காசீம் நேற்று முன்தினம் (29-01-2022) மரணமடைந்தார். பாவா காசீம் அவர்கள் மணவாளக்குறி...
மணவாளக்குறிச்சி, பள்ளித்தெருவில் வசித்து வந்த வி.எம்.பாவா காசீம் நேற்று முன்தினம் (29-01-2022) மரணமடைந்தார். பாவா காசீம் அவர்கள் மணவாளக்குறிச்சி மின்சார வாரியத்தில் ஊழியராக பணியாற்றி ஓய்வு பெற்றவராவார்.
பாவா காசீம் அவர்கள் தற்போது நாகர்கோவில், கோட்டார் பகுதியில் வசித்து வந்தார். சில நாள்களாக உடல்நிலை சரியில்லாத நிலையில் வயோதிகத்தின் காரணமாக நேற்று முன்தினம் இறந்தார்.
அன்னாரது உடல், நேற்று முன்தினம் மணவாளக்குறிச்சி பள்ளித்தெருவில் உள்ள அவரது உறவினர் வீட்டில் வைக்கப்பட்டு, பின்னர் மாலையில் மணவாளக்குறிச்சி முஸ்லீம் முஹல்லா மையவாடியில் வைத்து நல்லடக்கம் நடந்தது.
No comments