மணவாளக்குறிச்சி ஜங்ஷன் பகுதியில் பூக்கடை நடத்தி வந்த கண்ணன் (வயது 37) என்பவர் கடந்த 27-ம் தேதி (27-01-2021) திடீரென மரணமடைந்தார். இவர் வழக்க...
மணவாளக்குறிச்சி ஜங்ஷன் பகுதியில் பூக்கடை நடத்தி வந்த கண்ணன் (வயது 37) என்பவர் கடந்த 27-ம் தேதி (27-01-2021) திடீரென மரணமடைந்தார்.
இவர் வழக்கம் போல் காலையில் பூக்கடையை திறந்து வேலை பார்த்து வந்தார். மதியம் வீட்டிற்கு சாப்பிட பஸ்ஸில் சென்று கொண்டிருந்தார். அவருடைய ஊர் தலக்குளம் பகுதியில் உள்ளது. பஸ்ஸில் செல்லும்போதே அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதாக தெரிகிறது.
இந்நிலையில் பேருந்தில் இருந்து இறங்கியவர், கீழே விழுந்து இறந்ததாக கூறப்படுகிறது.
காலையில் நன்றாக இருந்த நபர் மதியம் மரணமடைந்த செய்தி கேட்டு மணவாளக்குறிச்சி பகுதியில் வியாபாரிகள் கவலையடைந்தனர். கண்ணனுக்கு 2 குழந்தைகள் உள்ளன.
No comments