குமரி மாவட்டம் குருந்தன்கோடு பகுதியை சேர்ந்தவர் பெர்னார்ட் ஜோ. இவர் குருந்தன்கோடு கிழக்கு ஒன்றிய திமுக மாணவரணி துணை அமைப்பாளராக பணியாற்றி வந...
குமரி மாவட்டம் குருந்தன்கோடு பகுதியை சேர்ந்தவர் பெர்னார்ட் ஜோ. இவர் குருந்தன்கோடு கிழக்கு ஒன்றிய திமுக மாணவரணி துணை அமைப்பாளராக பணியாற்றி வந்தவர்.

சிவில் இஞ்சினிரியங் பட்டதாரியான பெர்னார்ட் ஜோ, மஸ்கட் நாட்டில் பணிபுரிந்து, கடந்த ஒன்றரை ஆண்டுக்கு முன்னர் சொந்த ஊர் வந்தார். கடந்த வருடம் திருமணம் செய்தார்.
தொடர்ந்து வெளிநாடு செல்ல விருப்பமில்லாமல், குருந்தன்கோடு சந்திப்பு பகுதியில் சொந்தமாக பத்திரிக்கை மற்றும் டிஜிட்டர் டெக்னாலஜி நிறுவனத்தை நடத்தி வந்தார்.
இவர், ஜாய்குமரி நியூஸ், குமரி 360, குமரி எஃப்.எம் இணைய ரேடியோ, சிலுவை ரேடியோ, சிலுவை தொலைக்காட்சி என பல்வேறு ஊடகங்களை நிர்வகித்து வந்தார்.
குருந்தன்கோடு பகுதி மட்டுமின்றி மணவாளக்குறிச்சி உள்ளிட்ட குமரி மாவட்ட பிரபலங்களின் அன்பையும் பெற்று வந்தார். பல்வேறு சமூக நலன்களில் தன்னை ஈடுபடுத்தி வந்தார். வளர்ந்து வரும் நேரத்தில், அவரின் மரணம் பலருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
கடந்த சில நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் இருந்துவந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் உடல்நிலை மேலும் மோசமடைந்து நேற்று முன்தினம் இரவு இயற்கை எய்தினார்.
திருமணம் முடிந்து ஓராண்டு முடிந்த நிலையில், இந்த மரண செய்தி, அவரது மனைவி மற்றும் குடும்பத்தார்களை அதிர்ச்சியடைய செய்தது.
மிக இளம்வயதில், செல்வாக்கோடு வளர்ந்து வந்த சமூக நலக்காப்பாளன் பெர்னார்டு ஜோ மரண செய்தி, அனைத்து சமூக மக்களையும் வருத்தமடைய செய்தது.
அன்னாரது உடல் நல்லடக்கம் நேற்று மாலை, அவரது சொந்த ஊரான குருந்தகோட்டில் நடந்தது.
No comments