முதல் மனைவியுடன் உறவை துண்டிக்காத கணவனை தட்டிக் கேட்ட இரண்டாவது மனைவி இரும்பு பைப்பால் அடித்து கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்ப...
முதல் மனைவியுடன் உறவை துண்டிக்காத கணவனை தட்டிக் கேட்ட இரண்டாவது மனைவி இரும்பு பைப்பால் அடித்து கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அடுத்த மேல்பாக்கம் பகுதியை சேர்ந்த சரிதா (35) - அவரது முதல் கணவர் சுரேஷ் ஆகியோருக்கு செர்மிலி (7) என்ற மகள் உள்ளார். இந்நிலையில் சரிதாவுக்கு 3ஆண்டுகளுக்கு முன்பு மதன் (42) என்பவருடன் தொடர்பு ஏற்பட்டது. அவருக்கு அலமேலு என்ற மனைவியும், ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.
இதற்கிடையில், 2ஆண்டுகளுக்கு முன்பு மதன், சரிதா ஆகிய இருவரும் 2வது திருமணம் செய்து கொண்டனர். பின்னர் இருவரும் மேல்பாக்கத்தில் வசித்து வந்தனர். மேலும் , சரிதாவுடன் மகள் செர்மிலி இருந்தார் . சரிதா - மதனுக்கு பிறந்த 7 மாத பெண் குழந்தையும் உள்ளது.
கடந்த சில தினங்களாக மதனுடன் அவரது முதல் மனைவி அலமேலுவின் மகள் சங்கீதா செல்போனில் தொடர்பு கொண்டு அடிக்கடி பேசி வந்துள்ளார். இந்த தகவல் சரிதாவுக்கு தெரிந்து ஆத்திரம் அடைந்துள்ளார்.
இதனையடுத்து அவர் மதனிடம் முதல் மனைவி , குழந்தைகளுடன் தொடர்பில்லை எனக் கூறி தான் என்னை திருமணம் செய்து கொண்டு வாழ்க்கை நடத்துகிறாய் , அப்படி இருக்கையில் மீண்டும் அவர்களிடம் உறவாடுவது ஏன் எனக்கேட்டு தகராறு செய்துள்ளார்.
இந்த பிரச்னையின் போது சரிதா, மதனை அவதூறாக திட்டி உள்ளார் . ஆத்திரமடைந்த மதன் வீட்டில் இருந்த இரும்பு பைப்பை எடுத்து அவரின் தலையில் சரமாரியாக அடித்துள்ளார். இதில் , சம்பவ இடத்திலேயே சரிதா இறந்தார்.
அதன் பிறகு மதன் , தனக்கு பிறந்த 7 மாத குழந்தையுடன் அங்கிருந்து தப்பி ஓடினார் . தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு ஆவடி போலீஸார் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய மதனின் தீவிரமாக தேடினர் . பின்னர் கொலை நடந்த 3 மணி நேரத்தில் மதனை சுற்றி வளைத்து பிடித்தனர். போலீசார் மதனை கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர் .
No comments