பிறந்து மூன்று நாட்களே ஆன பிஞ்சு குழந்தையை பார்க்கச் சென்ற தந்தை சாலை விபத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். காஞ்சிபுரம் மாவட்டம், செவிலிமேடு ரோட...
பிறந்து மூன்று நாட்களே ஆன பிஞ்சு குழந்தையை பார்க்கச் சென்ற தந்தை சாலை விபத்தில் பரிதாபமாக உயிரிழந்தார்.

காஞ்சிபுரம் மாவட்டம், செவிலிமேடு ரோட்டு தெரு பகுதியை சேர்ந்த சுந்தரராஜ் என்பவரின் மகன் கார்த்திக். வயது 23. செவிலிமேடு அருகே உள்ள ஓர் தனியார் ஹார்டுவேர்ஸ் கடையில் பணிபுரியும் இவருக்கு, கடந்த 1 வருடங்களுக்கு முன்பு நளினி என்பவருடன் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் இவருக்கு கடந்த மூன்று நாட்களுக்கு முன்னர், பெண் குழந்தை பிறந்தது.
இதனையடுத்து நேற்று மாலை தனது மனைவியை செங்கல்பட்டு அரசு மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்து தனது மாமியார் வீட்டிற்கு குழந்தை மற்றும் மனைவியை அழைத்து சென்று விட்டுவிட்டு, செவிலிமேட்டிலுள்ள தனது வீட்டிற்கு வந்துள்ளார்.
இந்நிலையில் இரவு மீண்டும் மனைவி மற்றும் மகளை பார்க்க தாயார்குளம் பகுதியிலுள்ள தனது மாமியார் வீட்டிற்கு தனது இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். அப்போது ஜெம் நகர் அருகே சென்று கொண்டிருந்தபோது எதிரே அதிவேகமாக பயணிகளை ஏற்றிகொண்டு காஞ்சிபுரத்திலிருந்து திருவண்ணாமலை வழியாக சேலம் செல்லும் அரசு பேருந்தானது, கார்த்திக் இருசக்கர வாகனத்தின் பக்கவாட்டில் தட்டி பேருந்தானது அவரது வயிற்றின் மீது ஏறி இறங்கியுள்ளது.
இதனையடுத்து அருகிலிருந்தவர்கள் படுகாயங்களுடன் இருந்த கார்த்திக்கை மீட்டு அவசர ஊர்த்தி மூலம் காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இதனையெடுத்து அங்கு மருத்துவர்கள் பரிசோதித்ததில் அவர் ஏற்கெனவே உயிரிழந்தது தெரியவந்தது.
இதனையெடுத்து அவரது சடலம் உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பிவைக்கப்பட்டது. இது குறித்து தகலறிந்த வந்த தாலுகா போலீசார் அரசு பேருந்தினை பறிமுதல் செய்து ஓட்டுநரை காவல்நிலையம் அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தனது பிஞ்சு குழந்தையையும், மனைவியையும் ஒன்றாக இணைத்து வைத்து பார்க்க ஆசை ஆசையாய் சென்றவர் சாலைவிபத்தில் பலியான சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது.
No comments