Page Nav

HIDE

Grid

GRID_STYLE

Hover Effects

TRUE
{fbt_classic_header}

Latest News:

latest

Ads Place

65 வயதானவரை 25 வயது இளம்பெண் காதலித்து திருமணம்

பெண் நினைத்தால் எதுவும் நடத்திக்காட்டுவாள் என்பது உண்மையாயிற்று, 65 வயதான ஒருவரை, 25 வயது இளம்பெண் காதலித்து,திருமணம் செய்த சம்பவம் கர்நாடகத...

பெண் நினைத்தால் எதுவும் நடத்திக்காட்டுவாள் என்பது உண்மையாயிற்று, 65 வயதான ஒருவரை, 25 வயது இளம்பெண் காதலித்து,திருமணம் செய்த சம்பவம் கர்நாடகத்தில் நடந்து உள்ளது.
கர்நாடக மாநிலம்,துமகூரு மாவட்டம் குனிகல் தாலுகா சந்தேமவத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் மேகனா (வயது 25). இவருக்கும் ஒரு வாலிபருக்கும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்து இருந்தது.
இந்நிலையில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு வீட்டில் இருந்து வெளியே சென்ற மேகனாவின் கணவர் மாயமாகி விட்டார். அவரை எங்கு தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. இதனால் மேகனா தனியாக வாழ்ந்து வந்தார். மேலும் தனிமையாக இருப்பதை உணர்ந்த மேகனா 2-வது திருமணம் செய்யவும் முடிவு செய்தார்.

இந்நிலையில் மேகனாவுக்கும், சிக்கதனேகுப்பே கிராமத்தில் வசிக்கும் சங்கரண்ணா (65) என்பவருக்கும் காதல் ஏற்பட்டது.சங்கரண்ணாவுக்கு பேரன், பேத்தி போன்றோர் மேகனா வயதில் இருக்கின்றனர்.
அதைபொருட்படுத்தாமல் மேகனா, சங்கரண்ணாவை திருமணம் செய்ய விரும்பினார். இதற்கு சங்கரண்ணாவும் சம்மதம் தொிவித்தார்.

இதையடுத்து நேற்று சக்கதனகுப்பே கிராமத்தில் உள்ள கோவிலில் வைத்து எளிமையாக திருமணம் நடந்தது.
இதில் இருவரின் குடும்பத்தினர் மட்டுமே கலந்துகொண்டனர். இந்த நிலையில் சங்கரண்ணா-மேகனா ஆகியோரின் திருமண புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி உள்ளது. அந்த புகைப்படத்தை பார்த்தவர்கள் மேகனாவுக்கு ஆதரவாக பலரும் கருத்து பதிவிட்டு வருகிறார்கள். மேலும் வயதானவரை திருமணம் செய்ததாக மேகனாவுக்கு எதிராகவும் கருத்து கூறி வருகிறார்கள்.

No comments




வரலாற்று தகவல்கள்
அறிவியல் தகவல்கள்
ஆன்மிகம்
பொது அறிவு
மகளிர் ஸ்பெஷல்