Page Nav

HIDE

Grid

GRID_STYLE

Hover Effects

TRUE
{fbt_classic_header}

Latest News:

latest

Ads Place

மாட்டுச்சாணி மிகவும் சிறந்த உணவு: விரும்பி உண்ணும் டாக்டர்

சமூக வலைதளங்களில் பல்வேறு வகையான வீடியோக்கள் வைரலாகி வருகின்றன. இந்த வீடியோக்களில் சில மிகவும் வேடிக்கையாக இருந்தால், சில ஆச்சரியத்தை ஏற்படு...

சமூக வலைதளங்களில் பல்வேறு வகையான வீடியோக்கள் வைரலாகி வருகின்றன. இந்த வீடியோக்களில் சில மிகவும் வேடிக்கையாக இருந்தால், சில ஆச்சரியத்தை ஏற்படுத்துகின்றன.
இதுபோன்ற வீடியோக்களை மக்கள் மிகவும் விரும்புகிறார்கள். இது போன்ற வீடியோ ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை பார்த்து அனைவரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

பலர் மாட்டு மூத்திரத்தை உட்கொள்வதையும், அது தொடர்பான செய்திகளையும் கேட்டிருக்கலாம். ஆனால், பசுவின் சாணத்தை உட்கொள்ளும் யாரையும் பார்த்திருக்க முடியாது. உங்கள் முன் ஒருவர், மாட்டின் மலமான சாணத்தை சாப்பிடத் தொடங்கினால், என்ன தோன்றும்?
அதிலும் அந்த நபர் ஒரு MBBS மருத்துவர் என்றால் ஆச்சரியம் மட்டுமல்ல, திகைப்பும் ஏற்படும் என்பதை உறுதியாக சொல்லிவிட முடியும். அதுவும், சாணி உண்பதின் பலன்களை அவர் பட்டியலிடும்போது என்ன சொல்வது என்ற திகைப்பும் ஏற்படலாம்.

வைரலாகும் வீடியோவில் காணப்படும் நபரின் பெயர் மனோஜ் மிட்டல். வீடியோவில் மனோஜ் மாட்டுச் சாணத்தை சாப்பிடுவது போல் உள்ளது. மாட்டுச் சாணத்தில் வைட்டமின் பி12 போதுமான அளவில் உள்ளது என்று நம்பும் மனோஜ் மிட்டல், அடிக்கடி சாணத்தை சாப்பிடுவாராம்.

தனது உடல்நிலை குறித்து மிகவும் அக்கறை இருப்பதால்தான், தான் மாட்டு சாணத்தை சாப்பிட விரும்புகிறேன் என்று அவர் வீடியோவில் சொல்கிறார்.
மாட்டுச் சாணத்தில் வைட்டமின் பி12 (Vitamin B12) இருப்பதாக மருத்துவர் மனோஜ் நம்புகிறார். இந்த வைட்டமின் சாதாரண மக்களை கதிர்வீச்சிலிருந்து பாதுகாக்கிறது. மொபைல், ஃப்ரிட்ஜ், ஏசி போன்றவை அதிக கதிர்வீச்சை வெளியிடுகின்றன.

நாம் அன்றடம் பயன்படுத்தும் பொருட்களில் இருந்து வெளியேறும் கதிவீச்சினால், புற்றுநோய் போன்ற கடுமையான நோய்கள் பரவுகின்றன. எனவே, விட்டமின் பி12 அதிகம் உள்ள மாட்டுச் சாணியை சாப்பிட்டால் உடல் ஆரோக்கியம் மேம்படும் என்று டாக்டர் மிட்டல் கூறுகிறார்.

கர்ப்பிணிப் பெண்களுக்கும் மாட்டுச் சாணம் மிகவும் நன்மை பயக்கும் என்கிறார் மருத்துவர் மனோஜ் மிட்டல். பசுவின் சாணத்தை சாப்பிடுவதால், கர்ப்பிணிகளுக்கு சுகப்பிரசவம் ஏற்படும் வாய்ப்புகள் அதிகரிப்பதாக அவர் கூறுகிறார். மருத்துவர் ஒருவர் மாட்டுச் சாணத்தை சாப்பிடும் வீடியோவை லட்சக்கணக்கானோர் பார்த்துள்ளனர். இந்த வீடியோ சமூக ஊடகங்களில் RoflGandhi_ என்ற பயனர் பகிர்ந்துள்ளார். 
இந்த வீடியோவை இதுவரை லட்சக்கணக்கானோர் பார்த்துள்ளனர். ட்விட்டரின் ஒரே ஒரு கணக்கிலிருந்து பகிரப்பட்ட இந்த வீடியோ சுமார் 202K முறை பார்க்கப்பட்டுள்ளது. வைரலாகும் இந்த காணொளி குறித்து நெட்டிசன்கள் பலரும், பல்வேறு கருத்துக்களைப் பதிவிட்டு வருகின்றனர்.

No comments




வரலாற்று தகவல்கள்
அறிவியல் தகவல்கள்
ஆன்மிகம்
பொது அறிவு
மகளிர் ஸ்பெஷல்