கருங்கல் அருகே உள்ள கானாவூர் எள்ளுவிளை பகுதியை சேர்ந்தவர் அருள்தாஸ் (வயது 56) ஆட்டோ டிரைவர். திருமணமாகி ஒரு மகன் உள்ளார். அருள்தாஸ் நேற்று இ...
கருங்கல் அருகே உள்ள கானாவூர் எள்ளுவிளை பகுதியை சேர்ந்தவர் அருள்தாஸ் (வயது 56) ஆட்டோ டிரைவர். திருமணமாகி ஒரு மகன் உள்ளார்.
அருள்தாஸ் நேற்று இரவு கருங்கல் அருகே மேல்மிடலாம் கடற்கரை சாலையில் ஆட்டோவில் சென்ற போது, ஆட்டோ திடீரென்று கட்டுப்பாட்டை இழந்து கடலரிப்பு தடுப்பு சுவரில் மோதி கடலுக்குள் கவிழ்ந்தது.
இது குறித்து அந்த பகுதியில் உள்ளவர்கள் கருங்கல் காவல் நிலையத்திற்கும், குளச்சல் தீயணைப்பு நிலையத்திற்கும் தகவல் தெரிவித்தனர். போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
அப்போது ஆட்டோ அலை தடுப்பு சுவர் கற்களுக்கு இடையே சிக்கி இருந்தது. அருள்தாஸை காணவில்லை. கடல் அலை அவரை இழுத்து சென்றிருக்கலாம் என்பதால் அவரை தேடும் பணியில் ஈடுபட்டனர்.
வெகுநேரம் தேடியும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. இருளாக இருந்ததால் தேடும் பணியை நிறுத்தி விட்டு திரும்பி சென்றனர். இந்நிலையில் நள்ளிரவில் கொட்டும் மழையில் ராஜேஷ்குமார் எம்எல்ஏ அங்கு வந்தார். பின்னர் கிரேன் வரவழைக்கப்பட்டு ஆட்டோவை மீட்க்கும் முயற்சியை மேற்கொண்டனர்.
ஆனால் பெரிய கற்களுக்குள் சிக்கி இருந்ததால் ஆட்டோவை தூக்க முடியவில்லை. இதனால் மீட்பு பணியை இன்று காலையில் தொடர்ந்தனர். காலையில் அப்பகுதி மீனவர்கள் கடலில் மாயமான அருள்தாஸை தேடும் பணியை தொடங்கினர்.
தொடர்ந்து தேடும் போது நிலையில், அருள்தாஸ் உடல் மீட்கப்பட்டது. அதனை தொடர்ந்து கற்களுக்குள் சிக்கி இருந்த ஆட்டோவை வெளியே எடுத்தனர். அருள்தாசின் உடலை பார்த்து உறவினர்கள் கதறி அழுதது, அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது.
No comments