மண்டைக்காடு அருகே உள்ள கொத்தனார்விளை பகுதியை சேர்ந்தவர் குமார் (வயது 36). ஆட்டோ டிரைவராக உள்ளார். அவரது மனைவி சுமிதா. இந்த தம்பதியருக்கு 2 ப...
மண்டைக்காடு அருகே உள்ள கொத்தனார்விளை பகுதியை சேர்ந்தவர் குமார் (வயது 36). ஆட்டோ டிரைவராக உள்ளார். அவரது மனைவி சுமிதா. இந்த தம்பதியருக்கு 2 பிள்ளைகள் உள்ளனர்.
அந்த பகுதியில் உள்ள வீட்டில் குமார், அவரது மனைவி, பிள்ளைகள் மற்றும் பெற்றோர் என 6 பேர் வசித்து வருகின்றனர். கடந்த வாரம் குமாரி மாவட்டத்தில் பெய்த கனமழையால் அவர்களது வீடு இடிந்தது.
இதையடுத்து மண்டைக்காடு தேவசம்போர்டு பள்ளியில் அமைக்கப்பட்டு இருந்த தற்காலிக முகாமில் குமார், தனது குடும்பத்தினருடன் சென்றார். இந்நிலையில் மழை குறைந்த மழை வெள்ளம் வடிந்ததை தொடர்ந்து, முகாமில் இருந்தவர்களை வருவாய்த் துறையினர் வீடுகளுக்கு திரும்பி அனுப்பி வைத்தனர்.
அதன்படி, குமாரையும் குடும்பத்துடன் வீட்டிற்கு செல்லுமாறு அறிவுறுத்தினார். அதற்கு அவர் தனது வீடு இடிந்துவிட்டது எனவும், அதை கட்டும்வரை வெளியே செல்லமுடியாது எனவும், அதுவரை முகாமில் தான் இருப்போம் என்று கூறி அங்கிருந்து செல்ல மறுத்து விட்டதாக தெரிகிறது.
இதையடுத்து தொடர்ந்து பள்ளிமுகாமில் குமார் குடும்பம் இருந்து வருகிறது. இந்நிலையில் நேற்று பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில் வகுப்புகளுக்கு மாணவர்கள் வந்தனர். இருப்பினும் ஆட்டோ டிரைவரின் குடும்பத்தினர் பள்ளி வளாகத்திலேயே தங்கி இருந்தனர்.
No comments