இந்தியாவின் தென்கோடி முனையில் அமைந்து உள்ள உலகப் புகழ் பெற்ற சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரிக்கு ஆண்டுக்கு ஒரு கோடிக்கும் மேல் சுற்றுலா ...
இந்தியாவின் தென்கோடி முனையில் அமைந்து உள்ள உலகப் புகழ் பெற்ற சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரிக்கு ஆண்டுக்கு ஒரு கோடிக்கும் மேல் சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள்.
வெளிநாடுகளில் இருந்தும் வெளி மாநிலங்களில்இருந்தும் தினமும் ஆயிரக் கணக்கான சுற்றுலாப் பயணிகள் கன்னியாகுமரிக்கு வந்து செல்கிறார்கள். கன்னியாகுமரிக்கு வரும் வெளிநாடு மற்றும் வடமாநில சுற்றுலா பயணிகளில் பெரும்பாலானோர் ரெயில் மூலமாகவே வந்து சொல்கிறார்கள்.
இதனால் கன்னியாகுமரி ரெயில் நிலையத்தில் இருந்து மும்பை, பெங்களூரு, ஹிம்சாகர், ஹவுராஉள்பட பல்வேறு வெளி மாநிலங்களுக்கு ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதனால்இந்தியாவில் மேம்படுத்தப்பட உள்ள ரெயில் நிலையங்களில் ஒன்றாக கன்னியாகுமரி ரெயில் நிலையம் தேர்வாகி உள்ளது.
இதைத்தொடர்ந்து கன்னியாகுமரி ரெயில்நி லையம்ரூ.67 கோடி செலவில் நவீன மயமாக்கப்படுகிறது. இதைத் தொடர்ந்து வெளிநாட்டு சுற்றுலா பயணி களை வரும் வகையில் இந்த ரெயில் நிலையத்தின் முகப்பு பகுதியானது விவேகானந்தர் நினைவுமண்டபம் போல் வடிவமைக்கப்பட்டு அழகு படுத்தப்படுகிறது.
மேலும் கூடுதல் பயணிகள் வந்து செல்லும் வகையில் இந்த ரெயில் நிலையம் விரிவுபடுத்தப்பட உள்ளது. இந்த ரெயில் நிலையத்தில் கூடுதல் டிக்கெட் கவுண்ட ர்கள், ஓய்வு அறைகள், கழிவறைகள் உள்பட பல அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்பட உள்ளன.
இதைத்தொடர்ந்து கன்னியாகுமரி ரெயில் நிலைய மேம்பட்டு பணிக்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று மாலை கன்னியாகுமரி ரெயில் நிலையம் முன்பு உள்ள வளாகத்தில் நடந்தது.
சென்னை நேரு உள்வி ளையாட்டு அரங்கத்தில் இருந்து பிரதமர் மோடி இந்த ரயில் நிலையத்தின் மேம்பாட்டு பணியை காணொலிக் காட்சி மூலம் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.
அப்போது கன்னியாகுமரி ரெயில் நிலையத்தில் நடந்த நிகழ்ச்சியில் தமிழக தகவல் தொழில்நுட்பவியல்துறை அமைச்சர் மனோதங்கராஜ் குத்துவிளக்கு ஏற்றி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.
No comments