மணவாளக்குறிச்சி அருகே திருநையினார்குறிச்சி, மணவிளை பகுதியை சேர்ந்தவர் ஜேக்கப் (வயது63). ஒரு தனியார் கம்பெனியில் ஆடிட்டராக வேலை பார்த்து வருக...
மணவாளக்குறிச்சி அருகே திருநையினார்குறிச்சி, மணவிளை பகுதியை சேர்ந்தவர் ஜேக்கப் (வயது63). ஒரு தனியார் கம்பெனியில் ஆடிட்டராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி விமலா. இவர் ஓய்வு பெற்ற பள்ளி ஆசிரியை. இவர்களது மகன் பெங்களூருவில் வேலை செய்து வருகிறார்.
அவரை பார்ப்பதற்காக விமலா சில நாட்களுக்கு முன்பு பெங்களூருக்கு சென்றார். இதனால் வீட்டில் ஜேக்கப் மட்டும் தனியாக இருந்தார். இந்தநிலையில் நேற்று முன்தினம் காலையில் ஜேக்கப் வழக்கம் போல் வீட்டை பூட்டிவிட்டு வேலைக்கு சென்றார். நகை திருட்டு பின்னர் இரவு வீடு திரும்பிய போது வீட்டின் பின்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். வீட்டின் உள்ளே சென்ற போது பொருட்கள் சிதறி கிடந்தன.
மேலும், படுக்கை அறையில் உள்ள பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த பொருட்கள் தூக்கி வீசப்பட்டிருந்தன. பீரோவில் வைத்திருந்த தங்க கம்மல், பிரேஸ்லெட், மோதிரம், தங்க நாணயம் என மொத்தம் 9½ நகைகள் மாயமாகி இருந்தது. வீட்டில் ஆட்கள் இல்லாததை நோட்டமிட்ட மர்ம நபர்கள் கதவை உடைத்து நகைகளை திருடி சென்றுள்ளனர்.
போலீசார் விசாரணை இதுகுறித்து வெள்ளிச்சந்தை போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். மேலும் மோப்ப நாய் மற்றும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு சோதனை ேமற்கொள்ளப்பட்டது. இந்த திருட்டு குறித்து வெள்ளிச்சந்தை போலீசார் வழக்குப் பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
மேலும் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை கைப்பற்றி மர்ம நபர்களை அடையாளம் காணும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். பட்டப்பகலில் வீட்டின் கதவை உடைத்து நகை திருடப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
No comments