கார்த்திகை மாதம் பிறந்ததை தொடர்ந்து, ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதம் தொடங்கினர். இம்முறை சபரிமலை செல்ல கொரோனா தடுப்பூசி சான்று கட்டாயமாக...
கார்த்திகை மாதம் பிறந்ததை தொடர்ந்து, ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதம் தொடங்கினர். இம்முறை சபரிமலை செல்ல கொரோனா தடுப்பூசி சான்று கட்டாயமாக்கப்பட்டு உள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாதம் ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து 41 நாள்கள் விருத்தம் சபரிமலை செல்வார்கள். அதன்படி இன்று கார்த்திகை மாதம் பிறந்தது. குமரி மாவட்டத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் மாலை அணிந்து விரதம் தொடங்குவார்கள்.
கடந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக பக்தர்கள் எண்ணிக்கை குறைந்தது. இந்த முறையும் கொரோனா குறையவில்லை. இந்த முறை சபரிமலை செல்லும் பக்தர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன. 2 தவணை தடுப்பூசி போடப்பட்ட சான்றிதழ் வைத்திருக்க வேண்டும்.
இல்லையெனில் 72 மணி நேரத்திற்கு முன்னர் கொரோனா பரிசோதனை செய்த சான்றிதழ் வைத்திருக்க வேண்டும். ஆன்லைனில் முன்பதிவு செய்ய வேண்டும். நாள் ஒன்றிற்கு 30 ஆயிரம் பேருக்கு அனுமதி என்பன உள்ளிட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
No comments