Page Nav

HIDE

Grid

GRID_STYLE

Hover Effects

TRUE
{fbt_classic_header}

Latest News:

latest

Ads Place

1 முதல் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளி திறப்பு குறித்து முடிவெடுக்கவில்லை - அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி

தமிழகத்தில் 1 முதல் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பள்ளி திறப்பு தொடர்பாக இன்னுமும் முடிவெடுக்கப்பட இல்லை என அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி...

தமிழகத்தில் 1 முதல் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பள்ளி திறப்பு தொடர்பாக இன்னுமும் முடிவெடுக்கப்பட இல்லை என அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
கோவை காளப்பட்டியில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி, "மாநிலம் முழுவதும் முதல்வர் வேகத்துடன் செயல்பட்டு வருகிறார். கல்வியை அடுத்தக்கட்டத்திற்கு எடுத்து செல்ல இதுபோன்ற தன்னார்வலர்கள் முன் வருகிறார்கள். பணமாக கூட வேண்டாம் ஒரு பள்ளிக்கூடத்திற்கு தேவையான 4 இருக்கைகள் கூட வழங்கலாம். ஊடகங்கள் மூலம் இதுபோன்ற நல்ல செயல்களில் தன்னார்வலர்கள் ஈடுபடுத்திக்கொள்ள வேண்டும்.
நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி, கடந்த 5 ஆண்டுகளாக சட்டமன்றத்தில் நிறைய குரல் கொடுத்துள்ளோம். கூட்டத்தொடரில் கூட அனைத்துக்கட்சி சார்பில் ஒருமனதாக தனி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

கூட்டத்தொடர் ஆரம்பிக்கும்போது பாஜக எம்.எல்.ஏ., நயினார் நாகேந்திரன் சட்ட ரீதியாக பாதிப்பை பார்த்து ஆதரவு தெரிவிப்போம் என்று சொன்ன நிலையில், பின்பு அக்கட்சி வெளிநடப்பு செய்தனர். நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி, தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகிறோம்.
நீட் தேர்வு தகுதியான முறையில் நடைபெறுவதில்லை என்பதற்கு மஹாராஷ்டிரா நீட் தேர்வில் மோசடி விவகாரம் உதாரணம். 1 முதல் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பள்ளி திறப்பு தொடர்பாக இன்னுமும் முடிவெடுக்கப்பட இல்லை. ஒவ்வொரு மாவட்டத்தை பொறுத்தவரை, கொரோனா பரவல் ஒவ்வொரு மாதிரி உள்ளதால் வல்லுநர்கள் கேட்டு முடிவெடுக்கப்படும். பள்ளிகள் திறப்பு குறித்து முதல்வர் சொல்வதை போல் முடிவு எடுக்கப்படும்.

தனியார் பள்ளிகள் மாணவர்களை கண்டிப்பாக வர சொல்லக்கூடாது என நீதிமன்றமும், நாமும் வலியுறுத்தி உள்ளோம். மாணவர்கள் ஏன் வரவில்லை? என்பது கூட மாணவர்களின் இடைநிற்றல் இருக்கக்கூடாது என்பதற்காக விளக்கம் கேட்கிறோம்.
தனியார் பள்ளிகள் மாணவர்களை கண்டிப்பாக வர சொல்லக்கூடாது என நீதிமன்றமும், நாமும் வலியுறுத்தி உள்ளோம். மாணவர்கள் ஏன் வரவில்லை என்பது கூட மாணவர்களின் இடைநிற்றல் இருக்கக்கூடாது என்பதற்காகவே விளக்கம் கேட்கிறோம்." எனக் கூறினார்.

No comments




வரலாற்று தகவல்கள்
அறிவியல் தகவல்கள்
ஆன்மிகம்
பொது அறிவு
மகளிர் ஸ்பெஷல்