வாணியம்பாடியில் காதலித்த பெண்ணை சரமாரியாக வெட்டிக் கொலைசெய்த காதலன் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுதொடர்பாக வாணியம்பாடி நகர போலீசார் வி...
வாணியம்பாடியில் காதலித்த பெண்ணை சரமாரியாக வெட்டிக் கொலைசெய்த காதலன் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுதொடர்பாக வாணியம்பாடி நகர போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி மில்லத் நகர் பகுதியை சேர்ந்தவர் சசி என்கிற சரத்குமார். ஓசூர் பகுதியில் வேலைசெய்து வந்த இவர், அதே பகுதியை சேர்ந்த கோமதி என்ற பெண்ணை சில ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார்.
இந்நிலையில், இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்த நிலையில், நேற்று இரவு கோமதியை பேச அழைத்த சரத்குமார் திடீரென தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் கோமதியை சரமாரியாக வெட்டி உள்ளார்.
இதில், ரத்த வெள்ளத்தில் சரிந்த கோமதியை அப்பகுதி மக்கள் வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். தலை மற்றும் கழுத்து பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதால் இவரை உடனடியாக மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேண்டும் என மருத்துவர்கள் தெரிவித்ததன் பேரில் 108 ஆம்புலன்ஸ் மூலம் கோமதியை வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
இச்சம்பவம் குறித்து வாணியம்பாடி நகர போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் கோமதியை வெட்டிவிட்டு தப்பியோடிய சசி என்கிற சரத்குமாரை போலீசார் தேடிவந்தனர்.
இதையடுத்து அவர் வீட்டிற்கு சென்று விசாரணை மேற்கொண்டபோது வீட்டில் தூக்கில் தொங்கியபடி சரத்குமார் உயிரிழந்துள்ளார். சரத்குமார் சடலத்தை மீட்ட வாணியம்பாடி போலீசார் பிரேத பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து இரு சம்பவங்கள் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
No comments