Page Nav

HIDE

Grid

GRID_STYLE

Hover Effects

TRUE
{fbt_classic_header}

Latest News:

latest

Ads Place

நாகர்கோவில் அருகே மோட்டார் சைக்கிள் வேன் மோதி 3 பேர் பலி

நாகர்கோவில் அருகே மோட்டார் சைக்கிள், வேன் மோதிக்கொண்ட விபத்தில் புதுமாப்பிள்ளை உள்பட 3 பேர் பரிதாபமாக இறந்தனர். குமரி மாவட்டம் சீதப்பால் பகு...

நாகர்கோவில் அருகே மோட்டார் சைக்கிள், வேன் மோதிக்கொண்ட விபத்தில் புதுமாப்பிள்ளை உள்பட 3 பேர் பரிதாபமாக இறந்தனர்.
குமரி மாவட்டம் சீதப்பால் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ்பாபு. இவருடைய மகன் முத்துகிருஷ்ணன் (வயது 24). கொத்தனாரான இவர் மயிலாடியில் உள்ள தனது சகோதரி வீட்டில் மனைவியுடன் வசித்து வந்தார். கடந்த 20 நாட்களுக்கு முன்பு தான் முத்துகிருஷ்ணனுக்கு திருமணம் நடந்தது.
இந்நிலையில் முத்து கிருஷ்ணன் நாகர்கோவில் ராமன்புதூர் பகுதியில் உள்ள முகர்ஜிபாஸை (வயது 29) சந்திக்க போவதாக குடும்பத்தினரிடம் கூறி விட்டு மோட்டார் சைக்கிளில் புறப்பட்டுள்ளார்.

முகர்ஜிபாஸ் மூலமாகத்தான் முத்து கிருஷ்ணன் கட்டிட பணிக்கு சென்று வந்துள்ளார். முகர்ஜிபாஸின் சொந்த ஊரும் சீதப்பால் பகுதியாகும்.

இந்நிலையில் நாகர்கோவிலில் முத்துகிருஷ்ணன், முகர்ஜிபாஸை சந்தித்தார். பின்னர் அவர்கள் 2 பேரும் மற்றும் ஒரு வாலிபரும் சேர்ந்து மோட்டார் சைக்கிளில் கன்னியாகுமரி நோக்கி புறப்பட்டனர்.

அந்த சமயத்தில் கன்னியாகுமரியில் இருந்து நாகர்கோவில் நோக்கி ஒரு வேன் வந்தது. இந்த வேனை சரக்கல்விளை பகுதியை சேர்ந்த சுபாஷ் (வயது 29) என்பவர் ஓட்டினார். சுசீந்திரம் அருகே புறவழிச்சாலையில் ராகவேந்திரா கோவிலை நெருங்கிய போது மோட்டார் சைக்கிளும், வேனும் எதிர்பாராதவிதமாக மோதிக் கொண்டன.
கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் இருந்து 3 பேரும் தூக்கி வீசப்பட்டனர். இதில் பலத்த காயமடைந்த 3 பேரும் அதே இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பரிதாபமாக இறந்தனர்.

இந்த விபத்தில் வேனின் முன்பகுதி சேதமடைந்தது. மோட்டார் சைக்கிள் அப்பளம் போல் நொறுங்கியது. அதே சமயத்தில் வேனில் இருந்த யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இதுபற்றி தகவல் அறிந்ததும் சுசீந்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சாயிலெட்சுமி, சப்-இன்ஸ்பெக்டர் ஆஷா ஜெவகர் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.
சாலையில் பிணமாக கிடந்த 3 பேருடைய உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதற்கிடையே கன்னியாகுமரி போலீஸ் துணை சூப்பிரண்டு ராஜாவும் விபத்து நடந்த இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார்.

விபத்தில் பலியானவர்களில் 2 பேர் யாரென்று அடையாளம் தெரிந்தது. ஆனால் மற்றொருவர் யாரென்ற விவரம் உடனடியாக தெரியவில்லை. மேலும் இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மோட்டார் சைக்கிள்-வேன் மோதிய விபத்தில் 3 பேர் பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

No comments




வரலாற்று தகவல்கள்
அறிவியல் தகவல்கள்
ஆன்மிகம்
பொது அறிவு
மகளிர் ஸ்பெஷல்