Page Nav

HIDE

Grid

GRID_STYLE

Hover Effects

TRUE
Latest News:

Ads Place

சோசலிசத்தை கரம்பிடித்த மம்தா பேனர்ஜி

சேலத்தில் சோசலிசத்துக்கும் மம்தா பேனர்ஜிக்கும் திருமணம் நடைபெற்றுள்ளது. இதுகுறித்த செய்தியை விரிவாக காணலாம். மணமகன் சோசலிசம்; மணமகள் மம்தா ப...

சேலத்தில் சோசலிசத்துக்கும் மம்தா பேனர்ஜிக்கும் திருமணம் நடைபெற்றுள்ளது. இதுகுறித்த செய்தியை விரிவாக காணலாம். மணமகன் சோசலிசம்; மணமகள் மம்தா பேனர்ஜி; தங்கள் நல்வரவை எதிர்பார்க்கும் கம்யூனிசம், லெனினிசம், மார்க்சிசம். இப்படி ஒரு திருமண அழைப்பிதழ் கடந்த சில நாட்களாக சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது.
இந்நிலையில் கொரோனா ஊரடங்கு விதிமுறைகளுக்குட்பட்டு சேலம் கொண்டலாம்பட்டியை அடுத்த காட்டூர் பகுதியில் எளிமையாக நிகழ்ந்தது சோசலிசத்துடன் - மம்தாபேனர்ஜி கரம் கோர்த்த நிகழ்வு.
பாரம்பரிய கம்யூனிஸ்ட் குடும்பத்தை சேர்ந்தவரும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சேலம் மாவட்ட செயலாளருமான மோகன் கட்சிக் கொள்கைகளில் தீவிர ஈடுபாடு கொண்டிருந்த காரணத்தால் தங்கள் மகன்களுக்கு கம்யூனிசம், லெனினிசம், மார்க்சிசம், சோசலிசம் என்று வித்தியாசமாக கொள்கை ரீதியான பெயர்களை வைத்துள்ளார்.
இவரது உறவினர் குடும்பத்தில் பிறந்த பெண் குழந்தைக்கு மம்தா பேனர்ஜி என்ற பெயர் வைக்கப்பட்டது. அரசியலில் மம்தா - சோசலிசம் என்றாலே முரண்பட்ட கருத்துகளே முன்நிற்கும். மாறாக முறைப்பெண் மம்தா பேனர்ஜியை கடந்த மூன்று ஆண்டுகளாக நேசித்த சோசிலிசம் பெற்றோர் சம்மதத்துடன் இன்று கரம்பிடித்துள்ளார்.
மம்தா பேனர்ஜி என்ற பெயர் ஆரம்பத்தில் தனக்கு ஒரு நெருடலை ஏற்படுத்தியாதாக கூறும் மணப்பெண் தற்போது பெருமையாக உள்ளது என பெருமிதம் கொண்டார்.
அரசியலில் முரண்பட்ட கொள்கை கொண்ட பெயர்கள் என்றாலும் இல்லற வாழ்வில் ஓர் எடுத்துக்காட்டாய் திகழ்வோம் என்கிறார் சோசலிசம். பெயரால் அனைவரின் கவனத்தையும் ஈர்த்த இந்த இளம்ஜோடிக்கு பலதரப்பினரும் வாழ்த்துகளை தெரிவித்தவண்ணம் உள்ளனர்.

No comments




வரலாற்று தகவல்கள்
அறிவியல் தகவல்கள்
ஆன்மிகம்
பொது அறிவு
மகளிர் ஸ்பெஷல்

மகா சிவராத்திரியை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்திற்கு பிப...

மூணாறு விபத்தில் உயிரிழந்த மாணவ-மாணவிகளின் பெற்றோருக்கு நிதி...

மண்டைக்காடு பகவதியம்மன் திருக்கோவில் மாசிக்கொடை விழா மார்ச் ...

மணவாளக்குறிச்சி, பெரியவிளை பகுதியில் 2 வள்ளங்களில் மோட்டார் ...

புதிய கூட்டணியின் பெயர் ‘இந்தியா’ - சேர்ந்து போராடுவோம்: எதி...

மாதவலாயத்தில் கடை திறப்பு விழா பணியின் போது மின்சாரம் பாய்ந்...

மணவாளக்குறிச்சி அருகே உள்ள கடியப்பட்டணம் பகுதியை சேர்ந்த வால...

மணவாளக்குறிச்சி அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் பெண் போலீஸ...

மணவாளக்குறிச்சி பகுதியில் மின்சாரம் தாக்கி 10-ம் வகுப்பு மாண...

மணவாளக்குறிச்சி பேரூர் திமுக செயலாளராக ஐயப்பன் என்ற கண்ணன் ந...