ஆந்திர மாநிலம் ஸ்ரீகாக்குளம் மாவட்டத்தில் ஆம்புலன்ஸ் வராததால் இறந்த தாயின் உடலை அவரது மகன் 20 கிமீ தூரத்திற்கு பைக்கில் வைத்து கொண்டு சென்ற ...
ஆந்திர மாநிலம் ஸ்ரீகாக்குளம் மாவட்டத்தில் ஆம்புலன்ஸ் வராததால் இறந்த தாயின் உடலை அவரது மகன் 20 கிமீ தூரத்திற்கு பைக்கில் வைத்து கொண்டு சென்ற அவலம் நிகழ்ந்துள்ளது.

மண்டசா மண்டல் கிராமத்தைச் சேர்ந்த 50 வயது பெண்ணுக்கு கொரோனா அறிகுறிகள் இருந்ததை அடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
பரிசோதனை முடிவு வருவதற்குள் அந்தப் பெண் பரிதாபமாக உயிரிழந்தார். பின்னர் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது பரிசோதனை முடிவில் தெரியவந்தது.

இந்நிவையில் அவரது உடலை சொந்த ஊருக்கு ஏற்றிச் செல்ல ஆம்புலன்ஸ் கிடைக்காமல் பெண்ணின் மகனும், மருமகனும் தவித்துள்ளனர். கொரோனா தொற்றால் உயிரிழந்தவர் என்பதைக் காரணம் காட்டி ஒரு ஆம்புலன்ஸும் கூட வரவில்லை.
இதையடுத்து அப்பெண்ணின் மகனும் மருமகனும் பைக்கில், சுமார் 20 கிலோ மீட்டர் தூரம் சடலத்தை நடுவில் உட்காரவைத்தே எடுத்துச் சென்றனர். வளர்ந்து விட்ட நாடாக சொல்லிக் கொள்ளும் இந்தியாவில் இதுபோன்ற சம்பவங்கள் பெரும் அவலமாகவே பார்க்கப்படுகின்றன.
No comments