நாம் அனுப்பும் மற்றும் பெறும் செய்திகளை மறைய வைக்கும் புதிய அப்டேட்டை வாட்ஸ் ஆப் நிறுவனம் விரைவில் அறிமுகப்படுத்த உள்ளது. உலகம் முழுவதும் ஏர...
நாம் அனுப்பும் மற்றும் பெறும் செய்திகளை மறைய வைக்கும் புதிய அப்டேட்டை வாட்ஸ் ஆப் நிறுவனம் விரைவில் அறிமுகப்படுத்த உள்ளது.

உலகம் முழுவதும் ஏராளமானோர் பயன்படுத்தும் வாட்ஸ் ஆப்பில் அவ்வப்போது அந்நிறுவனம் அப்டேட்களை வழங்கி வருகிறது. அது பயனாளர்களுக்கு மிகவும் வசதியாகவும் இருக்கிறது. தற்போது பெரும்பாலான தகவல் பரிமாற்றம் வாட்ஸ் ஆப்பில் நடக்கிறது.
சமீபத்தில் தனி நபர் தகவல் குறித்த சர்ச்சை எழுந்த நிலையில் அதற்கு வாட்ஸ் ஆப் நிறுவனம் விளக்கம் அளித்தது. எல்லோரும் தகவல்களும் பாதுகாக்கப்படும் என கூறியது. அதனால் அந்த சர்ச்சை முடிவுக்கு வந்தது. அதனால் தொடர்ந்து வெற்றிகரமான செயலியாக வாட்ஸ் ஆப் இருந்து வருகிறது.
இந்நிலையில் தற்போது வாட்ஸ் ஆப் நிறுவனம் செய்திகளை மறையவைக்கும் (Disappearing Messages) புதிய அப்டேட்டை அறிமுகப்படுத்தவுள்ளது. இதன் மூலம் ஒருவர்க்கு அனுப்பும் செய்தியை மற்றும் நாம் பெறும் செய்தியை மறைய வைக்கலாம்.
இதற்கான கட்டுப்பாடு பயனர் கைகளில் இருக்கும். 24 மணி நேரம் அல்லது 7 நாட்களுக்கு என்ற இரண்டு ஆப்சன் உள்ளது. இதில் ஒன்றை தேர்வு செய்து பயன்படுத்தலாம் எனவும், அந்த செய்தியை ஸ்கிரீன் சாட் மூலம் சேமித்து வைத்துக் கொள்ளலாம் எனவும் வாட்ஸ் ஆப் நிறுவனம் தெரிவித்துள்ளது.
No comments