வாட்ஸ்அப் நிறுவனத்திற்கு 2021ஆம் ஆண்டின் தொடக்கம் மகிழ்ச்சியாக அமையவில்லை என்றே கூறவேண்டும். வாட்ஸ்அப் அதன் ப்ரைவசி கொள்கைகளையும் பயன்பாட்டு...
வாட்ஸ்அப் நிறுவனத்திற்கு 2021ஆம் ஆண்டின் தொடக்கம் மகிழ்ச்சியாக அமையவில்லை என்றே கூறவேண்டும். வாட்ஸ்அப் அதன் ப்ரைவசி கொள்கைகளையும் பயன்பாட்டு விதிகளையும் மாற்றியமைப்பதாகச் சமீபத்தில் அறிவித்தது.

புதிய ப்ரைவசி கொள்கைகளில் தகவல்களைத் தாய் நிறுவனமான ஃபேஸ்புக்கின் மற்ற தயாரிப்புகளுடன் பகிர்ந்துகொள்வோம் என வாட்ஸ்அப் சொல்ல மக்கள் பலரும் அதன் பாதுகாப்பு குறித்து கேள்விகள் எழுப்பத்தொடங்கினர். மேலும் கடும் எதிர்ப்பு எழுந்தது.
இதைத்தொடர்ந்து வாட்ஸ்அப், நண்பர்களுக்கும் குடும்பத்தினருக்கும் அனுப்பப்படும் மெசேஜ்களின் ப்ரைவஸி எந்த விதத்திலும் பாதிக்கப்படாது எனத் திட்டவட்டமாகத் தெரிவித்தது. மாறாக பிசினஸ் கணக்குகளுடன் நடக்கும் உரையாடல் குறித்தே புதிய கொள்கைகள் பேசுகின்றன என்றது வாட்ஸ்அப். புதிய ப்ரைவசி கொள்கை பற்றி அதிகம் கேட்கப்படும் சந்தேகங்களை விளக்க பிரத்யேக பக்கம் ஒன்றையும் தயார் செய்திருந்தது வாட்ஸ்அப்.
இதனால் வாட்ஸ்அப் நிறுவனத்திற்கு இந்தாண்டு தொடக்கமே பேரடியாக அமைந்தது. இதனை சமாளிக்கும் விதமாக வாட்ஸ்அப் நிறுவனம் பயனாளர்களை கவரும் வகையில் இந்தாண்டின் முதல் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அதில், வாட்ஸ்அப் செயலியின் வெப் வாட்ஸ்அப் வசதியிலும் வீடியோ கால் மற்றும் போன் செய்யும் செய்யும் வசதியை அறிமுகம் செய்ய உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுவரை இந்த வசதியை இதர செயலிகள் அறிமுகம் செய்யாத நிலையில், வாட்ஸ்அப் செயலி முதன்முறையாக அறிமுகம் செய்ய உள்ளது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் தனியுரிமை கொள்கைகளால் ஏற்பட்ட சர்ச்சைகளைக் கடந்து வாட்ஸ்அப் பயனர்களை ஈர்க்க முடியும் என அந்நிறுவனம் கருதுகிறது.
தற்போது, இது தொடர்பான சோதனைகளை வாட்ஸ்அப் மேற்கொண்டுள்ளதாகவும், விரைவில் அனைத்து பயனர்களும் பயன்படுத்தும் வகையில் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகும் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த வசதியை அறிமுகம் செய்வதன் மூலம் புதிய பயனர்களையும் வாட்ஸ்அப் ஈர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
No comments