Page Nav

HIDE

Grid

GRID_STYLE

Hover Effects

TRUE
Latest News:

Ads Place

ஆதார் அடையாள அட்டையில் முகவரியை நீங்களே மாற்றலாம். வழிமுறைகளை இங்கே காணலாம்...!!

இந்தியாவில் ஆதார் ஒரு முக்கியான அடையாள அட்டையாக உள்ளது. அரசும் பெரும்பாலான சேவைகளுக்கு ஆதாரை கட்டாயமாக்கி வருகிறது. குறிப்பாக வங்கி கணக்கு, ...

இந்தியாவில் ஆதார் ஒரு முக்கியான அடையாள அட்டையாக உள்ளது. அரசும் பெரும்பாலான சேவைகளுக்கு ஆதாரை கட்டாயமாக்கி வருகிறது.
குறிப்பாக வங்கி கணக்கு, பான் கார்டு, செல்போன் எண், அரசு மானியங்கள் பெற, வருமான வரி கணக்கு இப்படி பல சேவைகளில் ஆதார் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஆதார் கார்டில் முகவரியை மாற்ற வேண்டும் என்றால் எங்கேயும் செல்ல வேண்டியதில்லை. ஆன்லைனிலேயே ஆதார் கார்டை புதுப்பித்துக்கொள்ளலாம்.
UDAI போர்ட்டலுக்குச் சென்று ஆதார் கார்டை அப்டேட் செய்துகொள்ளலாம். அதற்கான வழிமுறைகள்,

ssup.uidai.gov.in/ssup/ என்ற இணையதளத்திற்கு செல்லவும்.

பின்பு Proceed to Update Aadhaar என்ற option-ஐ கிளிக் செய்யவும். அதன் பிறகு 12 இலக்க UID நம்பரை பதிவிடவும். அதன் கீழ் Captcha code என்டர் செய்யவும்.

பிறகு Send OTP என்ற Optionஐ கிளிக் செய்யவும். உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிற்கு OTP வரும். அதை எண்டர் செய்ய வேண்டும்.
லாகின் என்ற Option கிளிக் செய்ய வேண்டும்.

இப்போது 'Address Update' என்ற கட்டத்தில் தேவையான தகவல்களை வழங்கவும். புதிய முகவரியை உள்ளீடு செய்யவும். இந்த முகவரிக்கு தான் புதுப்பிக்கப்பட்ட ஆதார் கார்டு உங்களுக்கு தபாலில் வரும்.

இவ்வாறு முகவரியை பூர்த்தி செய்த பிறகு, உங்களது அசல் சான்றிதழ்களை ஸ்கேன் செய்து பதிவேற்றம் செய்ய வேண்டும்.

அனைத்து விவரங்களையும் பூர்த்தி செய்து சமர்ப்பித்த பிறகு, உங்களுக்கு புதுப்பிப்பதற்கான கோரிக்கை எண் (Update Request Number URN) வழங்கப்படும். இதை குறித்து வைத்துக் கொள்ள வேண்டும்.
ஒருவேளை நீங்கள் உங்களுடைய மொபைல் எண்னை ஆதாரில் பதிவு செய்யவில்லை என்றால், ஆன்லைனில் ஆதாரை புதுப்பிக்க முடியாது. அரசு சேவை மையத்திற்குச் சென்று தான் ஆதாரை புதுப்பிக்க வேண்டும்.

No comments




வரலாற்று தகவல்கள்
அறிவியல் தகவல்கள்
ஆன்மிகம்
பொது அறிவு
மகளிர் ஸ்பெஷல்

மகா சிவராத்திரியை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்திற்கு பிப...

மூணாறு விபத்தில் உயிரிழந்த மாணவ-மாணவிகளின் பெற்றோருக்கு நிதி...

மண்டைக்காடு பகவதியம்மன் திருக்கோவில் மாசிக்கொடை விழா மார்ச் ...

மணவாளக்குறிச்சி, பெரியவிளை பகுதியில் 2 வள்ளங்களில் மோட்டார் ...

புதிய கூட்டணியின் பெயர் ‘இந்தியா’ - சேர்ந்து போராடுவோம்: எதி...

மாதவலாயத்தில் கடை திறப்பு விழா பணியின் போது மின்சாரம் பாய்ந்...

மணவாளக்குறிச்சி அருகே உள்ள கடியப்பட்டணம் பகுதியை சேர்ந்த வால...

மணவாளக்குறிச்சி அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் பெண் போலீஸ...

மணவாளக்குறிச்சி பகுதியில் மின்சாரம் தாக்கி 10-ம் வகுப்பு மாண...

மணவாளக்குறிச்சி பேரூர் திமுக செயலாளராக ஐயப்பன் என்ற கண்ணன் ந...