கோஏா் நிறுவனம் குடியரசு தினத்தை முன்னிட்டு உள்நாட்டில் ரூ.859 கட்டணத்தில் விமானப் பயணம் மேற்கொள்ளும் திட்டத்தை அறிவித்துள்ளது. இதுகுறித்து அ...
கோஏா் நிறுவனம் குடியரசு தினத்தை முன்னிட்டு உள்நாட்டில் ரூ.859 கட்டணத்தில் விமானப் பயணம் மேற்கொள்ளும் திட்டத்தை அறிவித்துள்ளது.

இதுகுறித்து அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:-
குடியரசு தினத்தை முன்னிட்டு குறுகிய கால சிறப்பு சலுகையாக ரூ.859 கட்டணத்தில் உள்நாட்டு விமான பயணம் மேற்கொள்ளும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, ஜனவரி 22 முதல் 29-ஆம் தேதி வரையில் முன்பதிவு செய்பவா்களுக்கு மட்டுமே இந்த சலுகை கட்டணம் பொருந்தும். இதற்காக, 10 லட்சம் இருக்கைகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
இந்த திட்டத்தில் முன்பதிவு செய்து கொள்பவா்கள் ஏப்ரல் 1 முதல் டிசம்பா் 31 வரையில் எப்போது வேண்டுமானாலும் தங்களது விமானப் பயணத்தை மேற்கொள்ளலாம். ஒரு வழி பயணத்துக்கு மட்டுமே இந்த சலுகை கட்டணம் பொருந்தும்.
முதலில் வருபவருக்கு முன்னுரிமை என்பதன் அடிப்படையில் விமான பயணத்துக்கான இடங்கள் ஒதுக்கப்படும். இந்த திட்டம் நிறுவனம் நேரடியாக விமானங்களை இயக்கும் நகரங்களுக்கு மட்டுமே பொருந்தும் என கோஏா் அந்த செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.
No comments