தொடர்ந்து, 5வது நாளாக, இந்திய பங்குச் சந்தைகள் உயர்வை சந்தித்து வருகின்றன. கடந்த, 10 மாதங்களில் இல்லாத உயர்வை சந்தைகள் நேற்று சந்தித்தன. ரில...
தொடர்ந்து, 5வது நாளாக, இந்திய பங்குச் சந்தைகள் உயர்வை சந்தித்து வருகின்றன. கடந்த, 10 மாதங்களில் இல்லாத உயர்வை சந்தைகள் நேற்று சந்தித்தன.

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், எச்.டி.எப்.சி., நிறுவன பங்குகள் விலை உயர்ந்தது, இதற்கு சாதகமாக அமைந்தது.மும்பை பங்குச் சந்தையின் குறியீடான, சென்செக்ஸ், 552.90 புள்ளிகள் அதிகரித்து, 41893.06 புள்ளிகளாக உயர்ந்தது. இது, 1.34 சதவீத உயர்வாகும்.
இதேபோல், தேசிய பங்குச் சந்தையின் நிப்டியும், 143.25 புள்ளிகள் அதிகரித்து, வர்த்தகத்தின் இறுதியில், 12263.55 புள்ளிகளில் நிலைபெற்றது.நேற்றைய வர்த்தகத்தில், மும்பை பங்குச் சந்தையின், சென்செக்ஸ் பிரிவில், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவன பங்குகள் அதிக உயர்வை சந்தித்தன.
இப்பங்கின் விலை, 3 சதவீதம் அளவுக்கு அதிகரித்தது. இதனையடுத்து, பஜாஜ் பின்சர்வ், இண்டஸ்இண்ட் பேங்க், எச்.டி.எப்.சி., கோட்டக் வங்கி ஆகியவற்றின் விலைகளும் அதிகரித்தன.
மாறாக, மாருதி, பார்தி ஏர்டெல், ஏஷியன் பெயின்ட்ஸ், அல்ட்ராடெக் சிமென்ட், நெஸ்ட்லே இந்தியா ஆகிய நிறுவன பங்குகள் விலை, சரிவைக் கண்டன.அமெரிக்காவில், ஜனநாயகக் கட்சி வெற்றியை எட்டும் என்ற நிலை ஏற்பட்டுள்ளதால், வளரும் நாடுகளில் உள்ள சந்தைகள், ஏற்றம் கண்டன. இந்தியாவிலும் அது பிரதிபலித்தது.
No comments