பழைய வாகனங்களுக்கு பசுமை வரி விதிக்க மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி ஒப்புதல் அளித்துள்ளார். பழைய வ...
பழைய வாகனங்களுக்கு பசுமை வரி விதிக்க மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி ஒப்புதல் அளித்துள்ளார்.

பழைய வாகனங்களினால் சுற்றுச்சூழல் மாசு ஏற்படுவதால் மத்திய அரசு அதிரடி நடவடிக்கை ஒன்றை எடுத்துள்ளது. அதன்படி 8 ஆண்டுகள் பயன்படுத்திய வாகனங்களுக்கு பசுமை வரி விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
அதாவது 8 ஆண்டுகளான வாகனங்களுக்கு தகுதிச் சான்றிதழ் புதுப்பிக்கும் போது பசுமை வரி விதிக்கப்படும். சாலை வரியில் 10 முதல் 25 சதவீதம் வரை பசுமை வரி விதிக்கப்படும்.
இந்நிலையில் பழைய வாகனங்களுக்கு பசுமை வரி விதிப்பதற்கான முன்மொழிவுக்கு மத்திய சாலை போக்குவரத்துத்துறை அமைச்சர் நிதின் கட்கரி ஒப்புதல் அளித்துள்ளார்.
இதனையடுத்து இதுகுறித்து அறிவிக்கை வெளியாகும் முன் அனைத்து மாநிலங்களுக்கும் அனுப்பிவைக்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
No comments