நாகர்கோவில் செட்டிகுளம் சந்திப்பில் பிரமாண்டமாய் அமைத்துள்ள வணிக வளாகம் “ராஜாஸ் மால்”. நாகர்கோவிலின் மிகமுக்கிய வணிக வளாகமாக உள்ளது. இங்கு, ...
நாகர்கோவில் செட்டிகுளம் சந்திப்பில் பிரமாண்டமாய் அமைத்துள்ள வணிக வளாகம் “ராஜாஸ் மால்”. நாகர்கோவிலின் மிகமுக்கிய வணிக வளாகமாக உள்ளது.

இங்கு, சூப்பர் மார்க்கெட், ஆடவர்கான ஆடையகங்கள், ஷோரூம்கள் மற்றும் குழந்தைகளுக்கான பொழுதுபோக்கு அம்சங்கள் உள்ளிட்டவை அமைந்துள்ளது.
சக்கரவர்த்தி சினிமாஸ் என்ற 3 தியேட்டர்கள், சிறுவர்களுக்கான 5D தொழில்நுட்பத்துடன் கூடிய தியேட்டர் மற்றும் உணவு ரெஸ்டாரண்டுகள் உள்ளன.
கடந்த செப்டம்பர் மாதம் இந்த வணிக வளாகம் விதிமுறைகளை மீறி கட்டுப்பட்டதாக மாநகராட்சி சீல்வைத்தது. இதனால் சில மாதங்களாக வளாகம் பூட்டப்பட்டு இருந்தது.
இந்நிலையில் நேற்று முன்தினம் (ஜனவரி 22) முதல் ராஜாஸ் மால் திறக்கப்பட்டு, சக்கரவர்த்தி சினிமாஸ் தியேட்டரில் விஜய் மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் உருவான “மாஸ்டர்” படம் திரையிடப்பட்டது.
தொடர்ந்து அரங்கு நிறைந்த காட்சிகளாக மாஸ்டர் ஓடிக்கொண்டிருக்கிறது. இணையதளம் மூலம் மாஸ்டர் படத்திற்கான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து கொள்ளலாம்.
ராஜாஸ் மால் மீண்டும் திறக்கப்பட்டதால் நாகர்கோவில் செட்டிகுளம் பகுதி மக்கள் ஆரவாரத்துடன் மீண்டும் களைகட்டியது.
No comments