வெற்றிவேல் யாத்திரைக்கு தமிழக அரசு அனுமதி மறுத்த நிலையில், தமிழக பா.ஜ.க தலைவர் எல்.முருகன், பிரத்யேக வாகனம் மூலம் வேல் யாத்திரையைத் தொடங்க, ...
வெற்றிவேல் யாத்திரைக்கு தமிழக அரசு அனுமதி மறுத்த நிலையில், தமிழக பா.ஜ.க தலைவர் எல்.முருகன், பிரத்யேக வாகனம் மூலம் வேல் யாத்திரையைத் தொடங்க, கடவுள் முருகனை வழிபட கையில் வேலுடன் திருத்தணி கோயிலுக்குப் புறப்பட்டார்.

இந்த யாத்திரையில் ஹெச்.ராஜா உள்ளிட்ட பா.ஜ.க.வின் மூத்த தலைவர்களும் பங்கேற்றனர்.
வேல் யாத்திரை பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள நசரத்பேட்டைக்கு வந்தபோது தடுத்து நிறுத்திய போலீசார், திருத்தணி கோயிலுக்கு எல்.முருகனுடன் ஐந்து வாகனங்கள் மட்டுமே செல்ல அனுமதியளித்தனர்.
அப்போது, செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த எல்.முருகன், "தமிழகம் முழுவதும் திட்டமிட்டபடி வேல் யாத்திரை நடக்கும்" என்றார். இந்நிலையில், திருத்தணியில் தடையை மீறி வேல் யாத்திரை செல்ல முயன்றதாக பா.ஜ.க தலைவர் முருகன் உள்ளிட்ட 508 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தடை மீறல், அத்துமீறல், ஆர்ப்பாட்டம், அனுமதியின்றி கூட்டம் கூடுதல், சாலைமறியல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
No comments