தமிழகத்தில் கடந்த சில மாதமாக ஏற்பட்டுள்ள மின்தடைக்கு பராமரிப்பு பணிகள், அணிகளின் மின்கம்பி பயணங்கள் போன்றவை காரணம் என தமிழக மின்சாரத்துறை அம...
தமிழகத்தில் கடந்த சில மாதமாக ஏற்பட்டுள்ள மின்தடைக்கு பராமரிப்பு பணிகள், அணிகளின் மின்கம்பி பயணங்கள் போன்றவை காரணம் என தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்தார். இது பெரும் சர்ச்சையை சந்தித்தது.

மேலும், எதோ சில பகுதிகளில் இதுபோன்ற பிரச்சனை ஏற்படுவது வாஸ்தவம் என்றாலும், தமிழக முழுவதும் அணில் காரணமாக மின்தடை ஏற்படுகிறதா?. சென்னை போன்ற பெருநகரத்தில் புதைவடை மின்கம்பியில் பூமிக்கடியில் அணில்கள் ஓடுகிறதா? என்ற கேள்வியும் எழுந்தது.
மதுரை கோரிப்பாளையத்தில் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அதிமுக அமைச்சர் செல்லூர் ராஜு, " இந்த அமைச்சரவை அமைச்சர்கள் பெரும் விஞ்ஞானிகள். கடந்த ஆட்சியில் வெளிநாடுகளுக்கு அணில்கள் தப்பி சென்று இருந்தது.
திமுக ஆட்சி அமைந்ததும் அணில்கள் தாயகம் திரும்பி வந்து, மின் கம்பிகளை சேதப்படுத்தி வருகிறது. இதுபோன்ற விஞ்ஞான தகவலை கண்டறிந்த மாண்புமிகு மின்சாரத்துறை அமைச்சருக்கு, நோபல் பரிசு வழங்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் " என்று கலாய்த்து சென்றார்.
இந்நிலையில், மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தனது ட்விட்டர் பக்கத்தில், " ஆலங்குளம் துணை மின் நிலையத்து மின் பிரச்சினைகளுக்கு அணில்கள் காரணமென, 2020ல் மதுரை உயர்நீதிமன்றத்தில் அப்போதைய அதிமுக அரசு அளித்த விளக்கம் இது. பார்க்க படித்தவர் போலிருக்கும் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு இதைப்பற்றி முன்னாள் மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணியிடமோ உயர்நீதி மன்றத்திடமோ கேட்டு புத்தி தெளிய வேண்டுகிறேன் " என்று தெரிவித்துள்ளார்.
No comments