பேச்சிப்பாறை அணையில் இருந்து ஜூன் மாதம் முதல் வாரத்தில் பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடப்பட்டது. இருப்பினும் பல்வேறு சானல்களில் இன்னமும் த...
பேச்சிப்பாறை அணையில் இருந்து ஜூன் மாதம் முதல் வாரத்தில் பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடப்பட்டது.

இருப்பினும் பல்வேறு சானல்களில் இன்னமும் தண்ணீர் திறக்கப்பட வில்லை. இதில் முட்டம் – ராஜாக்கமங்கலம் தூர்வாரப்படாமல் செடி, கொடிகள் வளர்ந்து காணப்படுகிறது.
இந்த சானலில் அணைத் தண்ணீர் வராததால் விவசாயிகள் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.
தற்போது பேச்சிப்பாறை அணையில் போதிய அளவு தண்ணீர் இருந்தும் இதுநாள் வரை இந்த சானல் தூர்வாரப்படாமல் பராமரிப்பின்றி உள்ளது.
எனவே முட்டம் – ராஜாக்கமங்கலம் சானல், கிளை சானல்கள் சாந்தபுரம், அழகன்விளை, மூஞ்சிறவிளை, கடைவரம்பு பகுதிகள் அவரை தூர்வாரி, மதகுகளை பராமரித்து தடையின்றி தண்ணீர் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி விவசாயிகள் விரும்புகின்றனர்.
No comments