மணவாளக்குறிச்சி அருகே வெள்ளிச்சந்தை, சடையால்புதூரை சேர்ந்தவர் சந்திரன், கூலித்தொழிலாளி. இவர் நெல்லை மாவட்டம் லெப்பைகுடியிருப்பை சேர்ந்த உறவி...
மணவாளக்குறிச்சி அருகே வெள்ளிச்சந்தை, சடையால்புதூரை சேர்ந்தவர் சந்திரன், கூலித்தொழிலாளி.

இவர் நெல்லை மாவட்டம் லெப்பைகுடியிருப்பை சேர்ந்த உறவினர் தங்கப்பன் மகள் மனோ அபிராமியை (வயது 24) தத்து எடுத்து வளர்த்து வருகிறார்.
மனோ அபிராமி தற்போது ஒசூரில் ஒரு பொறியியல் கல்லூரியில் எம்.இ. 2-ம் ஆண்டு படித்து வருகிறார். இவர் நேற்று லெப்பைகுடியிருப்புக்கு சென்று வருவதாக கூறிவிட்டு சென்றார்.
ஆனால், அங்கு அவர் செல்லவில்லை. அத்துடன் உறவினர்கள், நண்பர்கள் வீடுகளில் தேடியும் அவரை குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை.
இது குறித்து சந்திரன் வெள்ளிச்சந்தை போலீசில் புகார் செய்தார். அந்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவியை யாராவது கடத்தி சென்றார்களா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
No comments