Page Nav

HIDE

Grid

GRID_STYLE

Hover Effects

TRUE
Latest News:

Ads Place

விரைவில் வெளியாகிறது Windows 11 : மைக்ரோசாஃப்ட் அறிவிப்பு

ஒரு கணினியின் செயலாக்கத்தில் முக்கிய பங்கு வகிப்பது கணினியினுள் உள்ள அடிப்படை மென்பொருளான OS எனப்படும் Operating System தான். ஒரு கணினியை மு...

ஒரு கணினியின் செயலாக்கத்தில் முக்கிய பங்கு வகிப்பது கணினியினுள் உள்ள அடிப்படை மென்பொருளான OS எனப்படும் Operating System தான். ஒரு கணினியை முழு பயன்பாட்டில் இயக்குவதற்கும் பிற மென்பொருள்களை கணினியில் பதிவேற்றம் செய்வதற்கும் இதுவே உதவுகிறது.
முதல் OS ஆன Windows 1, நவம்பர் 20 1983-இல் மைக்ரோசாஃப்ட் நிறுவனர் பில் கேட்ஸால் உலகிற்கு அறிமுகம் செய்யப்பட்டது. இது அவரது வாழ்க்கையையே மாற்றும் ஒரு நிகழ்வாக அமைந்தது என்றே கூறவேண்டும்.
அதன் பின் Windows 95 (August 1995), Windows 2000 (February 2000), Windows XP (October 2001), Windows Vista (November 2006), Windows 7 (October, 2009), Windows 8.1, என காலப்போக்கில் புதுப்பிக்கப்பட்டு வெளிவந்த பல்வேறு OS-களை கடந்து வந்து, தற்போது Windows 10-ஐ நாம் கணினியில் பயன்படுத்தி வருகிறோம்.

தற்போது 2025 முதல் இந்த Windows 10 செயல்படாது என்று வெளியாகியுள்ள செய்தி பலரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. Windows 10-க்கு மாற்றாக எதை பயன்படுத்துவது என அனைவரும் குழம்பியிருந்த நிலையில், அதற்கு பதிலாக வரும் ஜூன் 24 ஆம் தேதி Windows 11 அறிமுகம் செய்யப்பட உள்ளது என்று மைக்ரோசாஃப்ட் நிறுவனம் அறிவித்துள்ள செய்தி பலரையும் இன்ப அதிர்ச்சிக்குள் ஆழ்த்தியது.
மைக்ரோசாஃப்ட் தலைமை நிர்வாக அதிகாரி சத்யா நாடெல்லா ஏற்கனவே இந்த ஆண்டின் பில்ட் டெவலப்பர் மாநாட்டில் தனது உரையின் போது எதிர்காலத்தில் வெளியாக இருக்கும் விண்டோஸ் OS குறித்து பகிர்ந்துள்ளார். "கடந்த பல மாதங்களாக அதை தானே சுயமாக சோதனை செய்து வருவதாகவும், அது 'அடுத்த தலைமுறையினருக்கான விண்டோஸாக அமையும்' " என்றும் அவர் கூறினார்.
இது ஒரு புறம் இருக்க, விரைவில் வெளியாகவுள்ள Windows 11 உபயோகம் குறித்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் கசிந்துள்ளது அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.

கடந்த ஜூன் 15ஆம் தேதி சீன இணையதளமான பைடு டைபாவின் பயனர் ஒருவர் Windows 11 புதிய பதிப்பிலிருந்து எடுக்கப்பட்ட ஸ்கிரீன் ஷாட்களை இணையத்தில் கசியவிட்டுள்ளார். இது இணையவாசிகளிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. எனினும், Windows 11-ல் செய்யப்பட்டுள்ள சில மாற்றங்கள், ஆப்பிளின் OS ஆன IOS-ஐ ஒத்துள்ளது என்றும் சில இணையவாசிகள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

No comments




வரலாற்று தகவல்கள்
அறிவியல் தகவல்கள்
ஆன்மிகம்
பொது அறிவு
மகளிர் ஸ்பெஷல்

மகா சிவராத்திரியை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்திற்கு பிப...

மூணாறு விபத்தில் உயிரிழந்த மாணவ-மாணவிகளின் பெற்றோருக்கு நிதி...

மண்டைக்காடு பகவதியம்மன் திருக்கோவில் மாசிக்கொடை விழா மார்ச் ...

மணவாளக்குறிச்சி, பெரியவிளை பகுதியில் 2 வள்ளங்களில் மோட்டார் ...

புதிய கூட்டணியின் பெயர் ‘இந்தியா’ - சேர்ந்து போராடுவோம்: எதி...

மாதவலாயத்தில் கடை திறப்பு விழா பணியின் போது மின்சாரம் பாய்ந்...

மணவாளக்குறிச்சி அருகே உள்ள கடியப்பட்டணம் பகுதியை சேர்ந்த வால...

மணவாளக்குறிச்சி அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் பெண் போலீஸ...

மணவாளக்குறிச்சி பகுதியில் மின்சாரம் தாக்கி 10-ம் வகுப்பு மாண...

மணவாளக்குறிச்சி பேரூர் திமுக செயலாளராக ஐயப்பன் என்ற கண்ணன் ந...