சென்னை எழும்பூர்-கன்னியாகுமரி ரயில் கால அட்டவணையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ரயில் எண் 02633 சென்னை எழும்பூர்-கன்னியாகுமரி சிறப்பு ரயில் ஜ...
சென்னை எழும்பூர்-கன்னியாகுமரி ரயில் கால அட்டவணையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

ரயில் எண் 02633 சென்னை எழும்பூர்-கன்னியாகுமரி சிறப்பு ரயில் ஜனவரி மாதம் 24ம் தேதி முதல் புதிய கால அட்டவணையில் இயக்கப்படுகிறது. சென்னை எழும்பூரில் இருந்து மாலை 5.15க்கு பதில் இனி மாலை 5.20க்கு புறப்படும்.
இந்த ரயில் தாம்பரம், செங்கல்பட்டு, மேல்மருவத்தூர், திண்டிவனம், விழுப்புரம், விருதாச்சலம் ஆகிய ரயில் நிலைய நிறுத்தத்தில் தற்போதைய நேரத்தைவிட 5 நிமிடங்கள் தாமதமாக வந்து கன்னியாகுமரிக்கு காலை 6.20க்கு பதில் 6.25 மணிக்கு வந்து சேரும்.
இவ்வாறு செய்திகுறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments