Page Nav

HIDE

Grid

GRID_STYLE

Hover Effects

TRUE
{fbt_classic_header}

Latest News:

latest

Ads Place

திங்கள்நகரில் பணிகள் முடிந்த நிலையில் புதிய பேருந்து நிலையம்: உடனே திறந்து பேருந்துகளை இயக்க கோரிக்கை

குமரி மாவட்டம், திங்கள்நகர் பேரூராட்சிக்கு உட்பட்ட பேருந்து நிலையம், திங்கள்நகர் பகுதியில் 3 பிரிவுகளாக சுமார் 40 ஆண்டுகாலம் செயல்பட்டு வந்த...

குமரி மாவட்டம், திங்கள்நகர் பேரூராட்சிக்கு உட்பட்ட பேருந்து நிலையம், திங்கள்நகர் பகுதியில் 3 பிரிவுகளாக சுமார் 40 ஆண்டுகாலம் செயல்பட்டு வந்தது.
மிகவும் பழமைவாய்ந்த இந்த பேருந்து நிலையத்தில் மேற்கூரை பழுதடைந்து, காங்கிரீட் தகடுகள் விழுந்ததால் கடை வியாபாரிகள், பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர். 
எனவே பழுதடைந்த பேருந்து நிலையத்தை முழுமையாக மாற்றி, புதிய பேருந்து நிலையம் அமைக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது. அதன்படி தமிழக அரசு ஒருங்கிணைந்த நவீன பேருந்து நிலையம் அமைக்க ரூ.5.85 கோடி ஒதுக்கீடு செய்தது. 
அதனடிப்படையில் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு பழைய பேருந்து நிலையம் இடிக்கப்பட்டு, நவீன வடிவில் பேருந்து நிலையம் அமைக்கும் பணி தொடங்கியது. தற்போது பணிகள் முடிவடைந்த நிலையில் உள்ளது. பேருந்து நிலையம் இன்னும் திறப்புவிழா காணாததால், பஸ்கள் மெயின் ரோட்டில் நின்று பயணிகளை ஏற்றி செல்கிறது. 
இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, பொதுமக்கள் அவதிபட்டு வருகின்றனர். எனவே கட்டி முடிக்கப்பட்ட திங்கள்நகர் புதிய பேருந்து நிலையத்தை இம்மாத இறுதிக்குள் திறந்து பேருந்துகளை இயக்க வேண்டும் என வியாபாரிகள், பயணிகள் உள்ளிட்ட பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

No comments




வரலாற்று தகவல்கள்
அறிவியல் தகவல்கள்
ஆன்மிகம்
பொது அறிவு
மகளிர் ஸ்பெஷல்