கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக தொடர் மழை பெய்து வருகிறது. தற்போது தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளதால் கனமழை தீவிரமட...
கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக தொடர் மழை பெய்து வருகிறது. தற்போது தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளதால் கனமழை தீவிரமடைந்துள்ளது.

இந்நிலையில்ல கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் இருந்து திருவனந்தபுரத்திற்கு செல்லும் ரயில் தண்டவாள பாதையில் இரணியலை அடுத்த தெங்கன்குழி பகுதியில் மண் மேடுகளுக்கு மத்தியில் தாழ்வான பகுதி உள்ளது.
இங்க கனமழை நேரங்களில் மண் சரிவு ஏற்படும். அதைப்போல் இன்று அதிகாலை 2 மணியளவில் மண் சரிவு ஏற்பட்டு தண்டவாளத்தின் குறுக்கே விழுந்தது. இதனால் நாகர்கோவில், திருவனந்தபுரம் இடையேயான ரயில் பாதை துண்டிக்கப்பட்டது.

தற்போது பயணிகள் ரயில் இயங்காத நிலையில், திருவனந்தபுரத்தில் இருந்து சென்னைக்கு செல்லும் சரக்கு, மற்றும் பார்சல் ரயில்கள், ரயில்வே பணிக்காக தொழிலாளர்களை ஏற்றி செல்லும் ரயில்களின் சேவை நிறுத்தப்பட்டன.
தண்டவளாத்தை மூடியுள்ள மண்ணை அகற்றும் பணி பொக்லைன் மூலம் நடந்து வருகிறது. ஊரடங்கால் பயணிகளுக்கு பாதிப்பு ஏற்படவில்லை.
No comments