நேபாள எல்லையில் கொல்லப்பட்ட குமரி மாவட்ட ராணுவ வீரர் மணிகண்டன் உடல், 21 குண்டுகள் முழங்க இன்று சொந்த ஊரில் அடக்கம் செய்யப்பட்டது. குமர...
நேபாள எல்லையில் கொல்லப்பட்ட குமரி மாவட்ட ராணுவ வீரர் மணிகண்டன் உடல், 21 குண்டுகள் முழங்க இன்று சொந்த ஊரில் அடக்கம் செய்யப்பட்டது.

குமரி மாவட்டம் குருந்தன்கோடு, வீரவிளை பகுதியை சேர்ந்தவர் பங்கிராஜ் என்பவர் மகன் மணிகண்டன் (வயது 29). கடந்த 2014 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 27-ம் தேதி துணை ராணுவ படை பணியில் சேர்ந்து பணியாற்றி வந்தார்.
கடந்த மார்ச் 7-ம் தேதி இரவு ரோந்து பணியின் போது நேபாளத்தில் இருந்து இந்தியாவுக்கு மாடு கடத்த முயன்ற கடத்தல்காரர்களை தடுத்தார். அப்போது கடத்தல்காரர்கள் ஆயுதத்தால் மணிகண்டனை தாக்கி கொன்றனர்.
இதையடுத்து அவரது உடல் விமானத்தில் திருவனந்தபுரம் எடுத்துவரப்பட்டு, நேற்று இரவு சுமார் 8.30 மணி அளவில் சொந்த ஊருக்கு கொண்டு வரப்பட்டது. இதையடுத்து இன்று (8-ம் தேதி) காலை 8.30 மணிக்கு மணிகண்டன் உடல் வீட்டில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.

ராணுவ அதிகாரிகள், எஸ்.பி.ஸ்ரீநாத், குளச்சல் ஏஎஸ்பி விஸ்வேஸ் சாஸ்திரி, பிரின்ஸ் எம்எல்ஏ, மாவட்ட ஊராட்சி தலைவர் மெர்லியன்று தாஸ், துணை தலைவர் சிவகுமார், குருந்தன்கோடு ஊராட்சி ஒன்றிய தலைவி அனுஷா தேவி, ஆணையர் ஜெயஸ்ரீ, கல்குளம் தாசில்தார் மரகதவள்ளி, கக்கோட்டுதலை ஊராட்சி தலைவர் ஜெரால்டு கென்னடி, பாஜ தலைவர் தர்மராஜ், மூத்த தலைவர் எம்ஆர் காந்தி, பொதுசெயலாளர் குமரி ப.ரமேஷ் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.
அதை தொடர்ந்து குருந்தன்கோடு பகுதியில் உள்ள குடும்ப கல்லறை தோட்டத்தில் ராணுவ வீரர்கள் 21 குண்டுகள் முழங்க மணிகண்டன் உடல் அடக்கம் செய்யப்பட்டது.
No comments