Page Nav

HIDE

Grid

GRID_STYLE

Hover Effects

TRUE
Latest News:

Ads Place

நாகர்கோவிலில் இருந்து சென்னை, கோவைக்கு ரெயில்கள் இயக்கம்

தெற்கு ரெயில்வே திருவனந்தபுரம் கோட்டம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- தெற்கு ரெயில்வேயில் ரெயில்களின் சில சேவைகள் மீண்டும் தொட...

தெற்கு ரெயில்வே திருவனந்தபுரம் கோட்டம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
தெற்கு ரெயில்வேயில் ரெயில்களின் சில சேவைகள் மீண்டும் தொடங்குகிறது. மேலும் சில ரெயில்கள் தற்காலிக ரத்து நீட்டிப்பு செய்யப்படுகிறது. சேவையை தொடங்குகின்ற ரெயில்களுக்கு முன்பதிவுகள் தொடர்ந்து நடத்தப்படும். ரெயில் எண்.06336 நாகர்கோவில் சந்திப்பு-காந்திதாம் சந்திப்பு வாராந்திர சிறப்பு ரெயில், ரெயில் எண்.06335 காந்தி தாம் சந்திப்பு-நாகர்கோவில் சந்திப்பு வாராந்திர சிறப்பு ரெயில் இயக்கத்தை தொடங்குகின்றன.
மேலும் ரெயில் எண்.06861 புதுச்சேரி-கன்னியாகுமரி வாராந்திர சிறப்பு ரெயில், ரெயில் எண்.06862 கன்னியாகுமரி-புதுச்சேரி வாராந்திர சிறப்பு ரெயில், ரெயில் எண்.06063 சென்னை எழும்பூர்-நாகர்கோவில் சந்திப்பு வாராந்திர சிறப்பு ரெயில், ரெயில் எண்.06064 நாகர்கோவில் சந்திப்பு-சென்னை எழும்பூர் வாராந்திர சிறப்பு ரெயில், ரெயில் எண்.02668 கோயம்புத்தூர் சந்திப்பு- நாகர்கோவில் சந்திப்பு-சிறப்பு ரெயில், ரெயில் எண்.02667 நாகர்கோவில் சந்திப்பு-கோயம்புத்தூர் சந்திப்பு சிறப்பு ரெயில் ஆகியன இயக்கத்தை தொடங்கி உள்ளன.
ரெயில் எண்.06127 சென்னை எழும்பூர்-குருவாயூர் சிறப்பு ரெயில் திருவனந்தபுரம்-சென்ட்ரல் குருவாயூர் இடையே ஜூன் 1-ம் தேதி முதல் 15-ந்தேதி வரை ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த ரெயில் சென்னை எழும்பூரில் இருந்து திருவனந்தபுரம் சென்ட்ரல் வரை வழக்கமான கால அட்டவணையில் இயக்கப்படும் ரெயில் எண்.06128 குருவாயூர் சென்னை எழும்பூர் தினசரி சிறப்பு ரெயில் தற்காலிகமாக குருவாயூர்-திருவனந்தபுரம் சென்ட்ரல் இடையே ஜூன் 2 முதல் 16 வரை ரத்து செய்யப்படுகிறது. இந்த ரெயில் திருவனந்தபுரம் சென்ட்ரல் முதல் சென்னை எழும்பூர் வரை வழக்கமான அட்டவணையில் இயக்கப்படும்.

இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

No comments




வரலாற்று தகவல்கள்
அறிவியல் தகவல்கள்
ஆன்மிகம்
பொது அறிவு
மகளிர் ஸ்பெஷல்

மகா சிவராத்திரியை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்திற்கு பிப...

மூணாறு விபத்தில் உயிரிழந்த மாணவ-மாணவிகளின் பெற்றோருக்கு நிதி...

மண்டைக்காடு பகவதியம்மன் திருக்கோவில் மாசிக்கொடை விழா மார்ச் ...

மணவாளக்குறிச்சி, பெரியவிளை பகுதியில் 2 வள்ளங்களில் மோட்டார் ...

புதிய கூட்டணியின் பெயர் ‘இந்தியா’ - சேர்ந்து போராடுவோம்: எதி...

மாதவலாயத்தில் கடை திறப்பு விழா பணியின் போது மின்சாரம் பாய்ந்...

மணவாளக்குறிச்சி அருகே உள்ள கடியப்பட்டணம் பகுதியை சேர்ந்த வால...

மணவாளக்குறிச்சி அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் பெண் போலீஸ...

மணவாளக்குறிச்சி பகுதியில் மின்சாரம் தாக்கி 10-ம் வகுப்பு மாண...

மணவாளக்குறிச்சி பேரூர் திமுக செயலாளராக ஐயப்பன் என்ற கண்ணன் ந...